Advertisement


மான்செஸ்டர் சிட்டி 18வது வெற்றி

டிசம்பர் 28, 2017.
 Comments  
 


Premier League Soccer, Manchester City, 18th Win, Newcastle United
 

நியூகேசில்: பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி 1–0 என நியூகேசில் யுனைடெட் அணியை வீழ்த்தி, தொடர்ச்சியாக 18 வது வெற்றியை பதிவு செய்தது.

இங்கிலாந்தில் உள்ளூர் கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும் பிரிமியர் லீக் தொடர் நடக்கிறது. நியூகேசில் நகரில் நடந்த லீக் போட்டியில், மான்செஸ்டர் சிட்டி, நியூகேசில் யுனைடெட் அணிகள் மோதின. ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் ரஹீம் ஸ்டெர்லிங் ஒரு கோல் அடித்து கைகொடுக்க, முதல் பாதி முடிவில் மான்செஸ்டர் சிட்டி அணி 1–0 என முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் கடைசி நிமிடம் வரை போராடிய நியூகேசில் அணி வீரர்களால் பதிலடி தர முடியவில்லை. ஆட்டநேர முடிவில் மான்செஸ்டர் சிட்டி அணி 1–0 என வெற்றி பெற்றது. இது, மான்செஸ்டர் சிட்டி அணி தொடர்ச்சியாக பெற்ற 18 வது வெற்றி.

மான்செஸ்டர் சிட்டி அணி, இதுவரை 20 போட்டியில் 19 வெற்றி, ஒரு ‘டிரா’ உட்பட 58 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இரண்டு இடங்களில் முறையே மான்செஸ்டர் யுனைடெட் (43 புள்ளி), செல்சி (42) அணிகள் உள்ளன.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?