Advertisement


சென்னை அணிக்கு 5வது வெற்றி: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் அசத்தல்

டிசம்பர் 27, 2017.
 Comments  
 


ISL Football, Chennai, Jamshedpur, Jeje
 

ஜாம்ஷெட்பூர்: ஐ.எஸ்.எல்., லீக் போட்டியில் சென்னை அணி, 1–0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வென்றது.

இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் நான்காவது சீசன் தற்போது நடக்கிறது. இதன் லீக் போட்டியில் சென்னை, ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. போட்டியின் 41வது நிமிடத்தில், சென்னை வீரர் பிரான்சிஸ்கோ ‘பவுல்’ செய்யப்பட, ‘பெனால்டி’ வாய்ப்பு கிடைத்தது. இதை ஜீஜே கோலாக மாற்றினார். 

முதல் பாதியின் ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (45+ வது), ஜாம்ஷெட்பூர் அணிக்கு ‘பெனால்டி’ கிடைத்தது. இதை கோல் கீப்பர் கரண்ஜித் சிங், தனது இடது கையால் அசத்தலாக தடுத்தார். இரண்டாவது பாதியில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. முடிவில், சென்னை அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதுவரை நடந்த போட்டிகள் முடிவில், 5 வெற்றிகள் (1 ‘டிரா’, 2 தோல்வி) பெற்ற சென்னை அணி, 16 புள்ளியுடன், பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

17 கோல்

நேற்று ஒரு கோல் அடித்த ஜீஜே, ஐ.எஸ்.எல்.,கால்பந்து அரங்கில் சென்னை அணிக்காக அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை மெண்டோசாவுடன் பகிர்ந்து கொண்டார். இவர்கள் இருவரும் தலா 17 கோல் அடித்துள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?