Advertisement


உற்சாகத்தில் கோஹ்லி–அனுஷ்கா: மும்பையில் வரவேற்பு நிகழ்ச்சி

டிசம்பர் 27, 2017.
 Comments  
 


kohli Anushka
 

மும்பை: கோஹ்லி– அனுஷ்கா ஜோடியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி உற்சாகமாக நடந்து முடிந்தது. 

இந்திய அணி கேப்டன் கோஹ்லி– ‘பாலிவுட்’ நடிகை அனுஷ்கா திருமணம் இத்தாலியில் உள்ள சொகுசுவிடுதியில் நடந்தது. சமீபத்தில், நாடு திரும்பிய இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி முதலில் டில்லியில் நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று வாழ்த்தினார். தவிர, நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். கோஹ்லி– அனுஷ்கா இருவரும் தங்களின் துறையை சேர்ந்த நட்சத்திரங்களுக்காக மற்றொரு திருமண நிகழ்ச்சியை மும்பையின் ஓட்டல் ஒன்றில் நடத்தினர். 

மகளுடன் தோனி

இதில், இந்திய அணியின் தோனி தனது மனைவி சாக்சி மற்றும் மகள் ஜிவாவுடன் பங்கேற்றார். கிரிக்கெட் நட்சத்திரங்களான பும்ரா, புவனேஷ்வர், இஷாந்த், குல்தீப், அஷ்வின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னாள் வீரர்களான சச்சின், சேவக் விழாவில் பங்கேற்றனர். சில மாதங்களுக்கு முன், கோஹ்லியுடன் ஏற்பட்ட உரசலால் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய கும்ளேவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர்களைத்தவிர டென்னிஸ் வீரர் பூபதி, பாட்மின்டன் வீராங்கனை செய்னா உள்ளிட்டோரையும் காண முடிந்தது. ‘பாலிவுட்’ சார்பில் ஷாருக், அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், கத்ரினா ஆகியோர் கோஹ்லி– அனுஷ்காவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர். கோஹ்லி, ஷாருக்குடன் இணைந்து ‘பாலிவுட்’ பாடல் ஒன்றுக்கு நடனமாடி மகிழ்ந்தார். 

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?