Advertisement


ஐ–லீக் கால்பந்து: ஜிதேந்திரா அபாரம்

டிசம்பர் 26, 2017.
 Comments  
 


Arrows drub Lajong impressive show of passing football
 

புதுடில்லி: ஐ–லீக் தொடரில் இளம் வீரர்கள் அடங்கிய இந்தியன் ஆரோஸ் அணி, 3–0 என்ற கோல் கணக்கில் ஷில்லாங் அணியை வென்றது.

இந்தியாவில் ‘ஐ–லீக்’ உள்ளூர் கால்பந்து தொடரின் 11வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில், உலக கோப்பை (17 வயது) தொடரில் பங்கேற்ற இளம் வீரர்கள் அடங்கிய இந்தியன் ஆரோஸ் அணி, ஷில்லாங் அணியை சந்தித்தது.

போட்டியின் 19 வது நிமிடம் இளம் வீரர் ஜிதேந்திரா சிங் (16 வயது, 6 மாதம், 13 நாட்கள்) ஆரோஸ் அணிக்காக முதல் கோல் அடித்தார். இதையடுத்து, ஐ–லீக் தொடரில் குறைந்த வயதில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் கடந்த சீசனில் பாவோரிங்தாவோ போடோ (பஞ்சாப்), 17 வயது, 3 மாதம், 18வது நாளில் கோல் அடித்து இருந்தார்.

தொடர்ந்து ஆரோஸ் அணிக்காக நாவோரம் (86வது), ராகுல் கன்னோலி (90+1வது) என, இருவர் கோல் அடித்தனர். முடிவில், ஆரோஸ் அணி, 3–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இத்தொடரில் இந்த அணி பெற்ற இரண்டாவது வெற்றி இது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?