Advertisement


பிரிமியர் லீக் கால்பந்து: புதிய சாதனை

டிசம்பர் 26, 2017.
 Comments  
 


Kane sets Premier League goal record
 

லண்டன்: டாட்டன்ஹாம் அணியின் ஹாரி கேன், பிரிமியர் லீக் கால்பந்து அரங்கில் ஒரே ஆண்டில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார்.

இங்கிலாந்தில் கிளப் அணிகளுக்கு இடையே பிரிமியர் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. லண்டனில் நடந்த போட்டியில் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர், சவுத்தாம்ப்டன் அணிகள் மோதின. இதன் 22, 39வது நிமிடத்தில் அசத்திய டாட்டன்ஹாம் அணியின் ஹாரி கேன் கோல் அடித்தார். டேலே (49வது நிமிடம்) கைகொடுக்க, முதல் பாதியில் டாட்டன்ஹாம் 3–0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் டாட்டன்ஹாம் ஆதிக்கம் தொடர்ந்தது. ஹியுங் (51) தன் பங்கிற்கு கைகொடுத்தார். ஹாரி (67) ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து ஆர்ப்பரித்தார். எதிரணி சார்பில் சோபியானா (64), டசான் (82) ஆறுதல் தந்தனர். முடிவில், டாட்டன்ஹாம் அணி 5–2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

அதிக கோல்:

இதில், ‘ஹாட்ரிக்’ கோல் அடித்த ஹாரி, இத்தொடரில் ஒரே ஆண்டில் (39 கோல், 36 போட்டி) அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன், 1995ல் பிளாக்பர்ன் ரோவர்ஸ் 42 போட்டியில் 36 கோல் அடித்ததே சாதனையாக இருந்தது. தவிர, இந்த ஆண்டில் ஐரோப்பிய கால்பந்து அரங்கில் ஐந்து முக்கிய தொடரில் தேசிய மற்றும் கிளப் அணிக்காக அதிக கோல் அடித்த பார்சிலோனாவின் (54), சாதனையை ஹாரி (56) முறியடித்தார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?