Advertisement


சிந்துவுடன் விளையாட சிறுசுகளுக்கு வாய்ப்பு

டிசம்பர் 23, 2017.
 Comments  
 


sindhu
 

சென்னை: ஜன­வ­ரி­யில் நடக்­க­வுள்ள, பிரீ­மி­யர் பாட்­மின்­டன் லீக் – 2018ல், இந்­தி­யா­வின் பாட்­மின்­டன் சூப்­பர் ஸ்டார், பி.வி.சிந்­து­டன் விளை­யா­ட­வும், அவ­ரி­டம் பயிற்சி பெற­வும், ‘பூஸ்ட்’ நிறு­வ­னம், ஓர் அரிய வாய்ப்பை ஏற்­ப­டுத்தி தந்­துள்­ளது.

‘பிரீ­மி­யர் பாட்­மின்­டன் லீக் – 2018’ வரும் ஜன­வ­ரி­யில் நடக்­க­வுள்­ளது. நாட்­டில், கிரிக்­கெட் விளை­யாட்டை போல், கால்­பந்து, ஹாக்கி, டென்­னிஸ், பாட்­மின்­டன் உள்­ளிட்ட விளை­யாட்­டு­களை பிர­ப­லப்­ப­டுத்­த­வும், எதிர்­கால விளை­யாட்டு வீரர்­களை ஊக்­கு­விக்­க­வும், பிர­பல ஊட்­டச்­சத்து பான நிறு­வ­ன­மான, ‘பூஸ்ட்’ முயற்சி மேற்­கொண்­டுள்­ளது.

அதன் ஒரு பகு­தி­யாக, 14 வய­துக்­குட்­பட்ட, 100 குழந்­தை­களை தேர்வு செய்து, சென்னை மற்­றும் ஹைத­ரா­பாத்­தில் அடுத்த மாதம் நடக்­க­வுள்ள, பிரீ­மி­யர் பாட்­மின்­டன் லீக் நிகழ்ச்­சி­யில் பங்­கேற்க வைக்­க­வும், உலக கோப்பை பாட்­மின்­டன் போட்­டி­யில், வெள்­ளிப் பதக்­கம் வென்று இந்­தி­யா­விற்கு பெருமை சேர்த்த, சிந்­து­வு­டன் நேர­டி­யாக விளை­யா­ட­வும், ஓர் அரிய வாய்ப்பை, பூஸ்ட் நிறு­வ­னம் ஏற்­ப­டுத்தி கொடுத்­துள்­ளது.

இதில் பங்­கேற்ற விரும்­பும், 14 வய­திற்­குட்­பட்ட குழந்­தை­கள், 1800 5322 323 என்ற எண்­ணிற்கு டயல் செய்து, அதில் கேட்­கப்­படும், ஐந்து கேள்­வி­க­ளுக்கு விடை­ய­ளிக்க வேண்­டும். சரி­யான விடை­ய­ளிக்­கும் அதிர்ஷ்­ட­சா­லி­களில், 100 பேர் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு, அவர்­கள், சென்னை மற்­றும் ஹைத­ரா­பாத்­தில் நடக்­கும், ‘பிரீ­மி­யர் பாட்­மின்­டன் லீக்’ போட்­டி­க­ளின் போது, சிந்து மற்­றும் ஒலிம்­பிக்­கில் பாட்­மின்­டன் போட்­டி­யில் தங்­கம் வென்ற, ஸ்பெ­யின் நாட்டை சேர்ந்த கரோ­லினா மெரின் உட­னும் விளை­யாட வாய்ப்­ப­ளிக்­கப்­படும். ஜன­வரி 7ல், சென்­னை­யில் சிந்­து­வு­ட­னும், ஜன., 10ல், ஹைத­ரா­பாத்­தில், கரோ­லி­னா­வு­ட­னும் விளை­யா­டு­வ­தோடு,  அவர்­க­ளி­டம், பாட்­மின்­டன் விளை­யாட்டு குறித்த நுணுக்­கங்­க­ளை­யும் கற்­ற­றிய முடி­யும்.

அவர்­களில் சிறப்­பாக விளை­யா­டு­வோர் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு, ஹைத­ரா­பாத்­தில் உள்ள, பிர­பல பாட்­மின்­டன் வீரர் கோபி சந்த் நடத்­தும் பயிற்சி மையத்­தில், ஓராண்டு பயிற்சி பெற வழி­வகை செய்­யப்­படும். இதற்­கான கட்­ட­ணத்தை, பூஸ்ட் நிறு­வ­னம் ஏற்­கும். இந்த பயிற்சி மையத்­தில் தான், சிந்­து­வும் பயிற்சி பெற்­றார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இது குறித்து, ‘சென்னை ஸ்மா­ஷர்ஸ்’ மற்­றும், ‘ஹைத­ரா­பாத் ஹன்­டர்ஸ்’ அணியை ஸ்பான்­சர் செய்­யும், பூஸ்ட் ஊட்­டச்­சத்து பானத்தை தயா­ரிக்­கும், ஜி.வி.கே., நிறு­வன மார்க்­கெட்­டிங் அதி­காரி, விக்­ரம் பால் கூறி­ய­தா­வது: நாட்­டில் விளை­யாட்டு போட்­டி­களை வளர்க்­கும் வகை­யி­லும், கிரிக்­கெட் மட்­டு­மல்­லாது, பிற விளை­யாட்டு வீரர்­க­ளை­யும் உற்­சா­கப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­யில், எங்­கள் நிறு­வ­னம் ஈடு­பட்­டுள்­ளது. நாட்­டின் முன்­னணி ஊட்­டச்­சத்து பான­மான, பூஸ்ட்  பிரீ­மி­யர் பாட்­மின்­டன் லீக் போட்­டி­களை ஸ்பான்­சர் செய்­வ­தில் பெருமை கொள்­கி­றோம். பாட்­மின்­டன் விளை­யாட்­டில் ஜொலிக்க விரும்­பும் குழந்­தை­கள், இந்த அரிய வாய்ப்பை பயன்­ப­டுத்தி கொள்ள வேண்­டும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?