Advertisement


ஓயாத போட்டிகள்: செய்னா அதிருப்தி

டிசம்பர் 20, 2017.
 Comments [1]  
 


Saina, Badminton, India
 

புதுடில்லி: ‘‘உலக பாட்மின்டன் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அடுத்த ஆண்டிற்கான அட்டவணை மிகவும் நெருக்கடியாக அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து தொடரில் விளையாடினால் காயம் ஏற்படலாம்,’’ என, இந்திய பாட்மின்டன் வீராங்கனை செய்னா புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய பாட்மின்டன் நட்சத்திரம் செய்னா நேவல், 27. தரவரிசையில் 10வது இடத்திலுள்ள இவர், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் (2012) ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்றார். காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு, உலக சாம்பியன்ஷிப் என பல தொடரில் பதக்கத்தை வசப்படுத்தி உள்ளார். இதற்கிடையே, அடுத்த ஆண்டிற்கான போட்டி அட்டவணையை உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.,எப்.,) அறிவித்துள்ளது. தரவரிசையில் ‘டாப்–10’ வீரர், வீராங்கனைகள் குறைந்தது 12 தொடரில் பங்கேற்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு தொடருக்கும் இடையே போதிய இடைவெளி இல்லை என செய்னா புகார் கூறியுள்ளார்.

இது குறித்து செய்னா கூறியது: அடுத்த ஆண்டுக்கான தொடரின் அட்டவணையை பி.டபிள்யு.,எப்., வெளியிட்டுள்ளது. இது, மிகவும் நெருக்கடியாக அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து தொடரில் போதிய இடைவெளி இல்லாமல் பங்கேற்கும்போது, நட்சத்திரங்களுக்கு காயம் ஏற்படலாம். ஏனெனில், உடற்தகுதிக்குத்தான் அனைவரும் முன்னுரிமை தருவர். இதையும் மீறி பங்கேற்றால், போட்டியில் விளையாட மட்டும்தான் முடியும். கோப்பை கைப்பற்ற முடியாது.

நெருக்கடி அதிகரிக்கும்: பிரிமியர் பாட்மின்டன் லீக் (டிச. 23– ஜன.14) மற்றும் உலக சாம்பியன்ஷிப் (ஜூலை 30– ஆக.5, 2018) இடையே மட்டும் மொத்தம் ஆறு சூப்பர் சீரிஸ் தொடர் நடக்கவுள்ளது. தவிர, காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டும் நடக்கவுள்ளது. தொடர்ந்து போட்டியில் பங்கேற்றால் வீரர், வீராங்கனைகள் சோர்வடைந்துவிடுவர். மனதளவில் நெருக்கடியும் ஏற்படும்.

ஒருவேளை, டென்னிசை போல பாட்மின்டனை மாற்ற பி.டபிள்யு.,எப்., நினைக்கலாம். டென்னிசில் கிராண்ட்ஸ்லாம் அரங்கில் மொத்தம் 4 தொடர்தான் நடத்தப்படுகிறது. இதைப்போல, நடத்தினால் அதிக பரிசுத்தொகையும் கிடைக்கும். பி.டபிள்யு.,எப் தலைவராக நான் இருந்தால் இப்படித்தான் செய்திருப்பேன். இவ்வாறு செய்னா நேவல் கூறினார்.

இதே கருத்தை, நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் மரின் கரோலின் (ஸ்பெயின்) இதே கருத்தை வலியுறுத்தி உள்ளார்.

Advertisement

ஹைதராபாத் vs சென்னை , போட்டி 20
இந்திய பிரீமியர் லீக், 2018
4/22/2018 , 16:00
ராஜீவ் காந்தி இண்ட்டெர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Muthu 4 months ago | Report abuse
thinamum velaikku selbavargal ellam...........




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?