Advertisement


சபாஷ் சகால் * இந்தியா இமாலய வெற்றி

டிசம்பர் 19, 2017.
 Comments [1]  
 


india vs srilanka t 20 cricket, cuttack
 

கட்டாக்: முதல் ‘டுவென்டி–20’ போட்டியில் அசத்திய இந்திய அணி, 93 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. ‘சுழலில்’ மிரட்டிய சகாலிடம் இலங்கை அணி ‘சரண்டர்’ ஆனது.

 இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதிய முதல் போட்டி, நேற்று ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பாரபதி மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி கேப்டன் திசரா பெரேரா, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

இந்திய அணியில் ஷிகர் தவான், புவனேஷ்வருக்கு ஓய்வு தரப்பட்டு, லோகேஷ் ராகுல், உனத்கட் சேர்க்கப்பட்டனர். இலங்கை தரப்பில்  வேகப்பந்து வீச்சாளர் விஷ்வா பெர்னாண்டோ, அறிமுகம் ஆனார்.

ரோகித் ‘அவுட்’

இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஜோடி துவக்கம் கொடுத்தது. 13 பந்தில் 17 ரன் எடுத்த ரோகித், மாத்யூஸ் வேகத்தில் வீழ்ந்தார். பின் வந்த ஸ்ரேயாஸ் ஐயர், சமீரா ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரி அடிக்க, இந்திய அணி 6 ஓவரில் 50 ரன்கள் எடுத்தது.

ராகுல் அபாரம்

 மாத்யூஸ் பந்தை சிக்சருக்கு விரட்டிய ராகுல், 34 வது பந்தில் அரைசதம் எட்டினார். இது இவரது இரண்டாவது அரைசதம். இந்த ஜோடியின் சிறப்பான ரன் குவிப்பு கைகொடுக்க, இந்திய அணி 12.3 வது ஓவரில் 100 ரன்களை கடந்தது. ஸ்ரேயாஸ் (24) அவுட்டானார். அடுத்த சில நிமிடத்தில் ராகுல் (61 ரன், 48 பந்து) போல்டானார்.

அடுத்து தோனி, மணிஷ் பாண்டே இணைந்து மிரட்டினர். சமீரா வீசிய போட்டியின் 17 வது ஓவரில் மணிஷ் பாண்டே, தலா ஒரு சிக்சர், பவுண்டரி விளாச 19 ரன்கள் எடுக்கப்பட்டன. பிரதீப் ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்சர் உட்பட, 21 ரன்கள் கிடைத்தன.

பெரேரா வீசிய கடைசி பந்தில் தோனி ஒரு சூப்பர் சிக்சர் அடித்தார். கடைசி 4 ஓவரில் 61 ரன்கள் எடுக்கப்பட்டன. இந்திய அணி, 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு, 180 ரன்கள் குவித்தது. தோனி (39), மணிஷ் பாண்டே (32) அவுட்டாகாமல் இருந்தனர். 

சகால் ஜாலம்

 கடின இலக்கைத் துரத்திய இலங்கை அணிக்கு இந்திய அணியின் பவுலிங் ‘அட்டாக்’ பெரும் தொல்லையாக அமைந்தது. டிக்வெல்லா (13) ஏமாற்றினார். சகாலிடம், தரங்கா (23) சிக்கினார். தொடர்ந்து பந்தை சுழற்றிய சகால், அனுபவ மாத்யூஸ் (1), குணரத்னேவை (4) பெவிலியனுக்கு அனுப்பினார். குல்தீப்பிடம், ஷனாகா (1) ‘சரண்’ அடைந்தார். மீண்டும் மிரட்டிய சகால், பெரேராவை (3) அவுட்டாக்கினார். குசல் பெரேரா (19), குல்தீப்பிடம் வீழ்ந்தார். தனஞ்செயா (7), சமீரா (12), விஷ்வா (2) என, வரிசையாக பாண்ட்யாவிடம் சரிந்தனர். இலங்கை அணி, 16 ஓவரில், 87 ரன்னுக்கு சுருண்டது. 

இந்தியா சார்பில் சகால் 4, பாண்ட்யா 3 விக்கெட் வீழ்த்தினர்.  இமாலய வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரில் 1–0 என, முன்னிலை பெற்றது. ஆட்டநாயகன் விருதை சகால் வென்றார்.  

இரு அணிகள் மோதும் இரண்டாவது ‘டுவென்டி–20’ போட்டி, நாளை இந்துாரில் நடக்கவுள்ளது. 

 

10

சர்வதேச கிரிக்கெட் அரங்கில், 2010க்குப் பின், மாத்யூஸ் பந்துகளில், 10 வது முறையாக அவுட்டானார் இந்தியாவின் ரோகித் சர்மா (7 ஒருநாள், 2 டெஸ்ட், 1 ‘டுவென்டி–20). வெறு எந்த இந்திய வீரரும், ஒரே பவுலரிடம் இத்தனை முறை அவுட்டானது இல்லை.

 

38

மூன்று வித கிரிக்கெட்டில், இலங்கை அணி இந்த ஆண்டில் மட்டும் 40 போட்டிகளில் (7 டெஸ்ட், 23 ஒருநாள், 8 ‘டுவென்டி–20’) தோற்றது. வேறு எந்த அணியும், ஒரே ஆண்டில் இத்தனை போட்டிகளில் தோற்றது இல்லை. தவிர, இந்தியாவிடம் மட்டும் 13 முறை (4 டெஸ்ட், 5 ஒருநாள், 4 ‘டுவென்டி–20’) இந்த ஆண்டு தோற்றுள்ளது.

 

93

கட்டாக்கில் அசத்திய இந்திய அணி, ‘டுவென்டி–20’ அரங்கில் அதிக ரன்கள் (93) வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு முன் 2012ல் 90 ரன்கள் வித்தியாசத்தில் (எதிர்–இங்கிலாந்து, கொழும்பு) வென்றது.

 

100

சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில், 100வது போட்டியில் பங்கேற்ற நான்காவது அணி என்ற பெருமை இலங்கைக்கு கிடைத்தது. இதற்கு முன், பாகிஸ்தான் (120), நியூசிலாந்து (100), தென் ஆப்ரிக்க (100) அணிகள் இந்த இலக்கை எட்டின. அடுத்த இடங்களில் இங்கிலாந்து (96), ஆஸ்திரேலியா (95), வெஸ்ட் இண்டீஸ் (91), இந்தியா (89) உள்ளன.

 

1500

நேற்று 16 ரன்கள் எடுத்த போது, சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில், 1500 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார் ரோகித் சர்மா. கோஹ்லிக்கு (1956 ரன்) அடுத்து இந்த இலக்கை எட்டிய இரண்டாவது இந்திய வீரர் இவர் தான். ரெய்னா (1307), தோனி (1281), யுவராஜ் (1177) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

 

ரசிகர்களுக்கு ‘வேலி’

கடந்த 2015, அக்., 5ல், கட்டாக் மைதானத்தில் நடந்த ‘டுவென்டி–20’ போட்டியில், இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதின. இதில் இந்திய அணி 92 ரன்னுக்கு ஆல் அவுட்டாக, ரசிகர்கள் தண்ணீர் பாட்டில்களை மைதானத்தில் எறிந்து ரகளை செய்தனர். இதனால், இம்முறை பவுண்டரி எல்லையை சுற்றிலும், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

Advertisement
Cricket logo
South Africa - 335/10 (113.5)
India - 307/10 (92.1)
South Africa lead by 118 runs
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
c subramanian 3 weeks ago | Report abuse
வெற்றிகள் தொடரட்டும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?