Advertisement


பொல்லாத போதை பாதை...

டிசம்பர் 19, 2017.
 Comments  
 


stokes
 

வீரர்கள் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொள்வது சர்ச்சையை கிளப்பியுள்ளது.  இதனால், ‘ஜென்டில்மேன்’ விளையாட்டு என வர்ணிக்கப்படும் கிரிக்கெட்டின் ‘இமேஜ்’ பாதிக்கப்படுகிறது.

இங்கிலாந்து அணி ‘ஆல்–ரவுண்டர்’ பென் ஸ்டோக்ஸ், 26. நியூசிலாந்தில் பிறந்தவர் என்றாலும், 12 வயதில் இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். கடந்த 10வது ஐ.பி.எல்., ‘சீசனில்’ 14.5 கோடிக்கு புனே சார்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவரின் திறமையை பாராட்டி, இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டார். சமீபத்தில், சக வீரர் ஹேல்சுடன் இணைந்து மது போதையில், மற்றொரு நபருடன் மோதலில் ஈடுபட்டார். கிரிக்கெட் வீரர் என்பதை மறந்த இவர், சாலையில் கட்டிப்புரண்டு சண்டை போட்டார். போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் ஒரு நாள் இரவு முழுவதையும் கழித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரிலிருந்தும் புறக்கணிக்கப்பட்டார்.

டக்கெட் நீக்கம்:

இங்கிலாந்து அணி விக்கெட் கீப்பர் பென் டக்கெட், 23. கடந்த நவம்பரில் இந்தியாவுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த டெஸ்டில் கூட விளையாடி இருந்தார். ஆஷஸ் தொடருக்கான பயிற்சி போட்டியில் விளையாட இடம் கிடைத்தது. ஆனால், முந்தைய நாள் இரவு பெர்த்தில் மதுபான விடுதிக்கு சென்றார். சக ‘சீனியர்’ வீரருடன் வாக்கு வாதம் முற்றியநிலையில், மதுவை அவர் மீது ஊற்றிவிட்டார். பின், அணியிலிருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட, பயிற்சி போட்டியில் விளையாட முடியாமல் போனது.

வாடிக்கையான வார்ன்

ஆஸ்திரேலியாவின் முன்னாள் ‘சுழல்’ ஜாம்பவான் வார்ன் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதுதான் வேதனை. பெண்கள் பிரச்னையில் சற்று ‘வீக்கான’ இவர், கடந்த செப்டம் பரில் இரவு நேர விடுதியில் ‘பலான’ நடிகையான வாலேரியாவை சந்தித்துள்ளார். திடீரென, வாலேரியாவின் முகம், கன்னத்தில் வார்ன் குத்துவிட்டார். இப்புகைப்படத்தை வாலேரியா சமூகவலைதளத்தில் வெளியிட கிரிக்கெட் உலகம் சற்று அதிர்ந்தது. வார்ன் இல்லை என்று மறுத்தாலும், நம்ப தயாராக இல்லை.

இது குறித்து இங்கிலாந்து வீரர் மொயீன் அலி கூறுகையில்,‘‘ கிரிக்கெட் வீரர்களின் செயல்பாட்டை ‘டிவி’யில் பல சிறுவர்கள் பார்க்கின்றனர். அடுத்த தலைமுறையினருக்கு நாம் நல்லதை கற்றுத்தர வேண்டும். தற்போது நடப்பது இதற்கு எதிர்மாறாக உள்ளது. பொது இடத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை கிரிக்கெட் வீரர்கள் கற்றுக்கொள்வது அவசியம்,’’ என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?