Advertisement


ஆப்கன் வீரருக்கு தடை

டிசம்பர் 07, 2017.
 Comments  
 


Mohammad Shahzad
 

துபாய்: ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய ஆப்கானிஸ்தான் வீரர் முகமது ஷாஜத்துக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ஷாஜத், 29. இதுவரை 58 ஒருநாள் (1901 ரன்), 58 ‘டுவென்டி–20’ (1779) போட்டிகளில் விளையாடி உள்ளார். போட்டி இல்லாத நேரங்களில் நடந்தப்படும் சோதனை அடிப்படையில் இவரிடம், கடந்த ஜன., 17ம் தேதி, ஐ.சி.சி., ஊக்கமருந்து சோதனை நடத்தியது. அப்போது, இவரது சிறுநீர் மாதிரியில் ‘கிளன்பியூட்ரல்’ என்ற தடை செய்யப்பட்ட மருந்து இருந்தது உறுதியானது. இதையடுத்து இவர், சர்வதேச போட்டிகளில் பங்கேற்க, ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. சோதனை நடத்தப்பட்ட தினத்தில் இருந்து தடை துவங்கியதால், வரும் ஜன., 17 ம் தேதி முதல் இவர் போட்டிகளில் பங்கேற்கலாம்.

காரணம் என்ன:

இது குறித்து ஐ.சி.சி., வெளியிட்ட செய்தியில்,‘ ஆப்கானிஸ்தான் வீரர் முகமது ஷாஜத்தின் சிறுநீர் மாதிரியை சோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட ‘கிளன்பியூட்ரல்’ என்ற மருந்து கலந்திருந்தது. இதனால், மாதிரி எடுக்கப்பட்ட தேதி முதல் அடுத்த 12 மாதம் விளையாட தடை விதிக்கப்படுகிறது. மீண்டும் எதிர் வரும் ஜனவரி 17ம் தேதி போட்டியில் பங்கேற்கலாம்.

இதை ஒப்புக்கொண்ட ஷாஜத், தனது உடல் எடையை குறைப்பதற்காக ‘ஹைட்ரோக்சிகட்’ என்ற மருந்தை எடுத்ததாக தெரிவித்தார். ஐ.சி.சி.,யால் தடை செய்யப்பட்ட மருந்து கலந்திருந்தற்காக ஆதாரத்தையும் அளித்துள்ளார். இதை முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறோம். எதிர்காலத்தில், கிரிக்கெட் வீரர்கள் தாங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துப்பொருட்களில் கவனமாக இருப்பது அவசியம்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?