Advertisement


தென் ஆப்ரிக்காவில் அசத்துமா இந்தியா: என்ன சொல்கிறார் டிராவிட்

டிசம்பர் 07, 2017.
 Comments [1]  
 


india cricket team
 

புதுடில்லி: ‘‘வரும் தென் ஆப்ரிக்க டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதன் முறையாக வென்று சாதிக்கும். இதற்கான போதிய திறமை தற்போதைய அணியிடம் உள்ளது,’’ என, முன்னாள் வீரர் டிராவிட் தெரிவித்தார்.

டெஸ்ட் அரங்கில் ‘நம்பர்–1’ அணி இந்தியா. இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1–0 என, வென்ற இந்திய அணி, சர்வதேச அரங்கில் தொடர்ந்து 9 தொடர்களை வென்று வரலாறு படைத்தது. விரைவில் தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட், 2018, ஜன., 5–9ல் கேப்டவுனில் நடக்கும். அடுத்த இரு போட்டிகள் செஞ்சுரியன் (ஜன. 13–17), ஜோகனஸ்பர்க்கில் (ஜன. 24–28) நடக்கவுள்ளன. இதற்கு முன் டிச., 30–31ல் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாடுகிறது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன், இந்திய ‘ஏ’ மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணியின் பயிற்சியாளர் டிராவிட் கூறியது:

கோஹ்லி தலைமையில் இப்போதுள்ள இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் உள்ளனர். தேவைப்பட்டால், வேகப்பந்து ‘ஆல் ரவுண்டர்’ பாண்ட்யா விளையாட தயாராக உள்ளார். ஜடேஜா, அஷ்வின் என, நம்பகமான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

பேட்டிங் நம்பிக்கை:

தவிர, தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணியிலுள்ள முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும், 40 முதல் 50 டெஸ்டில் விளையாடிய அனுபவம் பெற்றுள்ளனர். இது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், எப்போதும் இல்லாத வகையில், இப்போதுள்ள இந்திய அணி, தென் ஆப்ரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதிக்க, அதிக வாய்ப்புள்ளது என நினைக்கிறேன்.

அதேநேரம், இம்மண்ணில் கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும். ஏனெனில் ஆடுகளத்தில் லேசாக புற்கள் காணப்படும். இதை மட்டும் சற்று சமாளித்து விட்டால் போதும், இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு வந்து விடும் என நம்புகிறேன்.

அவ்வளவு எளிதல்ல:

இந்திய அணி தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பதாக கூறுகின்றனர். ஒருசில ஆண்டுகளில் இதுபோல, நெருக்கடியான போட்டி அட்டவணைகள் அமைந்து விடும். இதனால், வீரர்களுக்கு அதிகப்படியான நெருக்கடி ஏற்படும். அதேநேரம், மற்ற அணிகளுக்கும் இதுபோல உண்டு. ஒருவேளை இதற்கேற்ப ‘அட்ஜஸ்ட்’ செய்து கொண்டால், அதிக போட்டிகளில் விளையாடலாம். இருப்பினும், இது அவ்வளவு எளிதல்ல. இவ்வாறு டிராவிட் கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Vanathi 37 minutes ago | Report abuse
Thalaivare..unga 2nd part thadupu suvar"Gambhir" indian team ku select panna sollunga..atleast mosama thokkama draw panratha pathiyavathu yosiklam.




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?