Advertisement


கோஹ்லி–அனுஷ்கா திருமணம் எப்போது

டிசம்பர் 06, 2017.
 Comments  
 


Virat Kohli, Anushka, Marriage at Italy
 

புதுடில்லி: கேப்டன் கோஹ்லி– அனுஷ்கா திருமணம், அடுத்த சில நாட்களில் இத்தாலியின் மிலன் நகரில் நடக்கும் எனத் தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி, 29. கடந்த 2013 ல் ‘பாலிவுட்’ நடிகை அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து ‘ஷாம்பு’ விளம்பரம் ஒன்றில் நடித்தார். பின் இருவருக்கும் இடையே காதல் தீ பற்றிக் கொண்டது.

சமீபத்தில் ஆடை நிறுவன விளம்பரத்தில் சேர்ந்து நடிக்க, விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. தற்போது, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள், ‘டுவென்டி–20’ தொடரில் இருந்து கோஹ்லிக்கு ஓய்வு தரப்பட்டது.

இந்த இடைவெ ளியில் கோஹ்லி– அனுஷ்கா திருமணம் நடக்கவுள்ளதாக மீண்டும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதன்படி, வரும் 9, 10 அல்லது 11ம் தேதிக்குள், இத்தாலியில் உள்ள மிலன் நகரில் இந்த ஜோடிக்கு திருமணம் நடக்கும் என தெரிகிறது.

இது உறுதியா

இதற்காக, கோஹ்லி–அனுஷ்கா உறவினர்கள், நண்பர்கள் இத்தாலி செல்ல டிக்கெட் வாங்கியுள்ளனர். போட்டோகிராபர்கள், ‘மேக் அப் ஆர்ட்டிஸ்ட்’, ‘டிசைனர்கள்’ உள்ளிட்டோரும், குறிப்பிட்ட தேதியில் தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். திருமண ஏற்பாடுகள் குறித்து முடிவு செய்ய, ஜோதிட நிபுணர்கள் அனுஷ்கா வீட்டுக்கு சென்று வந்ததும் தெரியவந்துள்ளது.

இதனால், இம்முறை திருமணம் நடப்பது உறுதி என்றே தெரிகிறது.  இத்தகவல் குறித்து கோஹ்லி, அனுஷ்கா தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?