Advertisement


சென்னை அணியில் ‘தல’ தோனி

டிசம்பர் 06, 2017.
 Comments  
 


IPL Chennai, Dhoni, Cricket
 

புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரில், சென்னை அணிக்கு தோனி திரும்புவது உறுதியாகிள்ளது. இவருடன் ரெய்னா, ஜடேஜா, அஷ்வின் உள்ளிட்டோரும் இடம் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2013ல் நடந்த ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் ஏற்பட்ட சூதாட்ட பிரச்னையால், சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டு (2016, 2017) தடை விதிக்கப்பட்டது.

இரு அணியின் வீரர்கள் புதிதாக உருவான புனே, குஜராத் அணிகளுக்காக விளையாடினர். கடந்த சீசனுடன் தடை முடிந்ததால், வரும் 2018 சீசனில், சென்னை, ராஜஸ்தான் அணிகள் மீண்டும் விளையாட உள்ளன. இதனிடையே, வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும் கொள்கை அடிப்படையில், ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை அணியில் வைத்துக்கொள்ள ஐ.பி.எல்., நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால், சென்னை, ராஜஸ்தான் அணி நிர்வாகங்கள், புனே, குஜராத் அணிகளில் இருந்து, 2015ல் அணியில் இருந்த, 5 வீரர்களை (நேரடியாக மூன்று, ஏலத்தின் போது இருவர்) எடுத்துக் கொள்ளலாம்.

தோனி உறுதி

இதனால், சென்னை அணிக்கு தோனி, மீண்டும் வருவது உறுதியாகியுள்ளது. தவிர, ரெய்னா, பிரண்டன் மெக்கலம், அஷ்வின், ஜடேஜா, டுவைன் பிராவோ உள்ளிட்டோரும் வருவர் என நம்பப்படுகிறது. இதனால், தோனி தலைமையில், மீண்டும் சென்னை அணி, மிரட்டக்காத்திருக்கிறது.

ரூ. 80 கோடி ஏலம்

வீரர்கள் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் பயன்படுத்தும் தொகை ரூ. 66 கோடியில் இருந்து, ரூ. 80 கோடியாக (2018) அதிகரிக்கப்பட்டது. அடுத்த இரு ஆண்டுகளில் (2019, 2020), இத்தொகை ரூ. 82 கோடி, ரூ. 85 கோடியாக அதிகரித்துக் கொள்ள அனுமதி தரப்பட்டது.

அதேநேரம், தக்கவைக்கப்படும் 3 வீரர்களுக்கு ரூ. 33 கோடி கொடுத்தது போக, மீதமுள்ள தொகையுடன் (ரூ. 47 கோடி) தான், அணிகள் ஏலத்தில் பங்கேற்க வேண்டும். இதன்படி, அணியில் ‘டாப்–3’ வீரர்களுக்கு ரூ. 15 கோடி, ரூ. 11 கோடி, ரூ. 7 கோடி சம்பளம் கிடைக்கும்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?