Advertisement


கோல் கீப்பருக்கு தடை * ஐ.எஸ்.எல்., தொடரில் திருப்பம்

டிசம்பர் 05, 2017.
 Comments  
 


indian soccer league, gurpreet singh ban
 


புதுடில்லி: விதிகளை மீறி செயல்பட்ட பெங்களூரு அணி கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சாந்து, 2 போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் நான்காவது சீசன் தற்போது நடக்கிறது. இதில் பெங்களூரு, கோவா அணிகள் மோதிய லீக் போட்டி சமீபத்தில் கோவாவில் நடந்தது. இப்போட்டியின் 36வது நிமிடத்தில், கோவா வீரர் மானுவல், பெங்களூரு கோல் கீப்பர் குர்பிரீத் சிங் மீது தலையால் இடித்தார். உடனே, அவரது தலையில் கையை வைத்து தள்ளி விட்டார் குர்பிரீத் சிங். இதனால் உடனடியாக ‘ரெட் கார்டு’ காட்டப்பட்டு, களத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இதுகுறித்து அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,), ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்து நடவடிக்கை எடுத்தது. இதன் சார்பில் வெ ளியான அறிக்கை:

ஒழுங்கு விதி 49ன் படி, எதிரணி வீரர்கள் அல்லது அணி நிர்வாகிகள் மீது மோதலில் ஈடுபடக்கூடாது. இதை மீறிய பெங்களூரு அணி கோல் கீப்பர் குர்பிரீத் சிங், இரண்டு போட்டிகளில் பங்கேற்க தடை மற்றும் ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. அடுத்த 10 நாட்களுக்குள் அபராதத்தை செலுத்த வேண்டும். இல்லையெனில், தடை தொடரும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?