Advertisement


செரினோ கோல்: சென்னை வெற்றி

டிசம்பர் 03, 2017.
 Comments  
 


sereno
 

புனே: புனே அணிக்கு எதிரான ஐ.எஸ்.எல்., லீக் கால்பந்து போட்டியில் செரினோ அசத்த சென்னை அணி 1–0 என வெற்றி பெற்றது.

இந்தியாவில் ஐ.எஸ்.எல்., தொடரின் நான்காவது ‘சீசன்’ தற்போது நடக்கிறது. இம்முறை, முதல் முறையாக சென்னை அணி அன்னிய மண்ணில் பங்கேற்றது. நேற்று மும்பையின் புனே நகரில் நடந்த லீக் போட்டியில் புனே அணியை எதிர் கொண்டது. 30வது நிமிடத்தில் புனே வீரர் அல்பாரோ அடித்த கோல் ‘ஆப்–சைடு’ என அறிவிக்க, சென்னை ரசிகர்கள் பெருமூச்சு விட்டனர். முதல் பாதியில் ஒரு கோல் கூட அடிக்கப்படவில்லை.

இரண்டாவது பாதியில் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்ட சென்னையின் செரினோ (50வது நிமிடம்), தனபால் கணேஷ் (60)  மஞ்சள் அட்டை பெற்றனர். இப்படி அடுத்தடுத்து ஏமாற்றம் கிடைத்த நிலையில், மாற்றம் தந்தார் சென்னை கேப்டன் செரினோ. 82வது நிமிடத்தில் ‘கார்னர் கிக்கில்’ ஜெமி தந்த பந்தை பெற்ற செரினோ அப்படியே தலையால் முட்டி கோலாக்கினார். இதற்கு எதிரணி பதிலடி தர திணற, சென்னை அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம், வட கிழக்கு அணிக்குப்பின் தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. தவிர, ஒட்டுமொத்த ஐ.எஸ்.எல்., வரலாற்றில் புனே அணிக்கு எதிராக தோல்வியே சந்திக்காமல் வலம் வருகிறது. இதுவரை, இரு அணிகளுக்கு இடையிலான 7 போட்டிகளில் சென்னை 5 வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டி ‘டிரா’ ஆனது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?