Advertisement


எளிமையானவர்... ‘வலிமையானவர்’

டிசம்பர் 03, 2017.
 Comments  
 


Mirabai Chanu
 

உலக சாம்பியன்ஷிப் பளுதுாக்குதல் வரலாற்றில் கர்ணம் மல்லேஸ்வரிக்குப் பின் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என, சாதித்துள்ளார் மீராபாய் சானு.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் மணிப்பூர். இந்திய விளையாட்டின் தலைநகர் எனலாம். மேரி கோம் (குத்துச்சண்டை), குஞ்சராணி தேவி (பளுதுாக்குதல்) உள்ளிட்ட பல விளையாட்டு நட்சத்திரங்களை தந்த மாநிலம். இங்குள்ள கிழக்கு இம்பாலைச் சேர்ந்தவர் மீராபாய் சானு, 23. உயரம் 4 அடி, 11 இன்ச் தான் (150 செ.மீ.,). கடந்த 2007ல் இம்பாலில் பளுதுாக்குதலில் கால்பதித்தார். முன்னாள் வீராங்கனை குஞ்ச ராணி தேவியின் பயிற்சியில் சர்வதேச அரங்கில் அசத்தினார். 2011 யூத் சாம்பியன்ஷிப், 2014 காமன்வெல்த், 2016 தெற்காசிய விளையாட்டுகளில் தங்கம் வென்றார்.

ஏமாற்றம்:

பெரும் எதிர்பார்ப்புடன் ரியோ ஒலிம்பிக் (2016) சென்றார். முதலில் ‘ஸ்னாட்ச்’ பிரிவில் 82 கி.கி., எடை துாக்கினார். பின், ‘கிளீன் அண்டு ஜெர்க்’ முறையில் 104 கி.கி., எடை கூட துாக்க முடியாமல் போக, மொத்தம் களமிறங்கிய 12 பேரில், போட்டியை முடிக்காத 2 பேர் பட்டியலில் இணைந்தார். இது பெரும் ஏமாற்றத்தை தந்தது. இம்முறை சுதாரித்துக் கொண்டார் மீரா பாய். 48 கி.கி., எடைப்பிரிவில்  ‘ஸ்னாட்ச்’ பிரிவில் 85 கி.கி., எடையை இரண்டாவது வாய்ப்பில் துாக்கினார். பின், ‘கிளீன் அண்டு ஜெர்க்’ முறையில் 109 கி.கி., எடை கூட துாக்க (மொத்தம் 194 கி.கி.,) தங்கம் இவர் வசம் ஆனது.

கர்ணம் மல்லேஸ்வரியை (1994, 1995) அடுத்து, 22 ஆண்டுக்குப்பின், உலக சாம்பியன்ஷிப் பளுதுாக்குதலில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமை பெற்றார். தவிர, தனது உடல் எடையை விட, நான்கு மடங்கு அதிகமான எடை துாக்கி அசத்தியுள்ளார்.

இந்த உற்சாகத்தில் உள்ள மீராபாய் சானு கூறியது: தங்கம் வென்ற பிறகு எனது அம்மாவிடம் பேசினேன். உடனே அழத் துவங்கி விட்டார். எளிமையான குடும்பத்தை சேர்ந்த நான் இந்த நிலையை அடைய எவ்வளவு சிரமப்பட்டேன் என்று அவருக்குத் தான் தெரியும். தவிர, கடந்த சில நாட்களுக்கு முன் எனது மூத்த சகோதரியின் திருமணம் நடந்தது.

சோகம் மறைந்தது:

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க வந்து விட்டதால், திருமணத்துக்கு செல்ல முடியவில்லை. இந்த வருத்தம் அதிகமாக இருந்தது. இதற்கான பலன் கிடைத்து விட்டது. தற்போது தங்கம் வென்றதால், அந்த சோகம் மறைந்துள்ளது. உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வெல்ல வேண்டும். கர்ணம் மல்லேஸ்வரி போல வர வேண்டும் என்று கனவு கண்டேன். இப்போது அது நிறைவேறி விட்டது. அடுத்து காமன்வெல்த், ஆசிய விளையாட்டில் சாதிக்க முயற்சிப்பேன். இவ்வாறு மீராபாய் சானு கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?