Advertisement


வீரர்களின் விருப்பம் நிறைவேறுமா

டிசம்பர் 03, 2017.
 Comments  
 


india cricket team
 

இந்திய கிரிக்கெட் வரலாற்றில், எப்போதும் இல்லாத வகையில், போட்டிகள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், சம்பள உயர்வு வேண்டும் என, வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி 1983ல் முதன் முதலில் உலக கோப்பை வென்ற போது, வீரர்களுக்கு சிறப்பு பரிசு  கொடுக்கக் கூட, இந்திய கிரிக்கெட் போர்டிடம் நிதி வசதி இல்லை என்பர். இதன் பின், கிரிக்கெட்டில் அசுர வளர்ச்சி கண்ட இந்தியா, இன்று உலக அணிகளை ஆட்டிப்படைக்கும் வல்லரசாக திகழ்கிறது.

விளம்பரம், ஒளிபரப்பு உரிமை உட்பட பல்வேறு வழிகளில் பணம் கொட்டுகிறது. தவிர, ஐ.பி.எல்., வருமானம் ஒருபுறம் தனியாக வருகிறது. இதில் 26 சதவீதம் வீரர்களுக்கு தரப்படுகிறது. இதன் படி, ஒப்பந்தப்பட்டியலில் ‘ஏ’ கிரேடில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி வரை பி.சி.சி.ஐ., தருகிறது. ஆனால், இதை உயர்த்தி தரவேண்டும் என, வீரர்கள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர். ஏனெனில், ஆண்டு ஒப்பந்தம் மற்றும் போட்டி சம்பளம் சேர்த்து, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (ரூ. 9.47 கோடி), இங்கிலாந்தின் ஜோ ரூட் (ரூ. 8.89 கோடி) பெறும் சம்பளத்தை விட, கோஹ்லி (ரூ. 6.44 கோடி) குறைவாகத் தான் பெறுகிறார்.

இதனால், தங்களது ஒப்பந்த சம்பளத்தை, ரூ. 5 கோடியாக அதிகரிக்க வேண்டும் என, போட்டிகள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என, வீரர்கள் தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.

பேச்சு எப்படி

வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வீரர்களுக்கு என தனியாக சங்கம் உள்ளன. சம்பளம் குறித்து இந்த சங்கம் தான், கிரிக்கெட் போர்டுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தும். இந்தியாவில் வீரர்களுக்கு சங்கங்கள் கிடையாது. பி.சி.சி.ஐ., வைத்தது தான் சட்டம். அதேநேரம், சமீபத்திய சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளால், பி.சி.சி.ஐ., குழம்பிப் போய் கிடக்கிறது. 

இந்த குட்டையில் மீன் பிடித்து விடலாம் என்று தற்போது கோஹ்லி உள்ளிட்டோர் கிளம்பியுள்ளனர். ஏனெனில், இங்கு சங்கங்கள் இல்லாததால், வீரர்கள் தரப்பில் கேப்டன் என்ற முறையில் கோஹ்லி, ‘சீனியர்’ தோனி இவ்விஷயத்தில் தலையிட்டுள்ளனர். இவர்களது கோரிக்கை நிறைவேறுமா, சம்பள பிரச்னை தீருமா என, பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பயிற்சியாளருக்கு அதிகம்

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆண்டுக்கு மொத்தம் ரூ. 7.54 கோடி சம்பளம் வாங்குகிறார். இது மற்ற அணிகளை விட மிக அதிகம். ஏனெனில், ஆஸ்திரேலியாவின் டேரன் லேமன் ரூ. 3.54 கோடி, இங்கிலாந்தின் டிரிவர் பேலிஸ் ரூ. 3.35 கோடி சம்பளம் தான் வாங்குகின்றனர்.

இது அதிகம் தான்

‘டாப்–3’ அணிகள் பங்கேற்கும் போட்டிகளுக்கு ஏற்ப வீரர்கள் பெறும் சம்பளம்:

அணி டெஸ்ட் ஒருநாள் ‘டுவென்டி–20’  (லட்சத்தில்)

இந்தியா ரூ. 15,06,330 ரூ. 6,02,533 ரூ. 3,01,266

இங்கிலாந்து ரூ. 12,69,240 ரூ. 4,25,548 ரூ. 3,40,439

ஆஸ்திரேலியா ரூ. 9,66,423 ரூ. 3,53,324 ரூ. 2,52,365

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?