Advertisement


தங்கம் வென்றார் மீராபாய்: உலக பளுதுாக்குதலில் சாதனை

நவம்பர் 30, 2017.
 Comments [3]  
 


Mirabai Chanu, World Weightlifting Championship
 

அனாஹெய்ம்: உலக பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் 48 கி.கி., எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றார். இதன் மூலம், உலக அரங்கில் 22 ஆண்டுக்குப்பின் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார்.

அமெரிக்காவின் அனாஹெய்ம் பகுதியில் உலக பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் பெண்களுக்கான 48 கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் மீராபாய் சானு பங்கேற்றார். அபாரமான செயல்பாட்டை வெளிப்படுத்திய இவர், முதலில் ‘ஸ்னாட்ச்’ பிரிவில் 85 கி.கி., எடை துாக்கினார். பின் ‘கிளீன் அண்டு ஜெர்க்’ முறையில் 109 கி.கி., துாக்கினார்.

மொத்தம், 194 கி.கி., எடை துாக்கிய மீராபாய் சானு, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். தவிர, தனது முந்தைய தேசிய சாதனையும் (192 கி.கி.,) இவர் தகர்த்தார். தாய்லாந்தின் சுக்சரோய்ன் (193 கி.கி.,), கொலம்பியாவின் செகுரா (182 கி.கி.,), அடுத்த இரு இடங்களை பிடித்து வெள்ளி, வெண்கலம் வென்றனர்.

22 ஆண்டுக்குப்பின்...

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரை சேர்ந்தவர் மீராபாய் சானு, 23. கடந்த காமன்வெல்த் விளையாட்டில் (கிளாஸ்கோ, 2014) இதே பிரிவில் இவர் வெள்ளி வென்றிருந்தார். ரியோ (2016) ஒலிம்பிக்கில் பங்கேற்ற இவர், பைனலில் ஏமாற்றியதால் பதக்கம் கைப்பற்ற முடியவில்லை.

இம்முறை சாதித்ததை அடுத்து, உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார். கடைசியாக, 22 ஆண்டுக்கு முன் கர்ணம் மல்லேஸ்வரி 1994 (இஸ்தான்புல், துருக்கி), 1995ம் ஆண்டில் (குவாங்சு, சீனா) நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இரு தங்கம் வென்றிருந்தார்.

வருத்தம் நீங்கியது

இது குறித்து மீராபாய் சானு கூறுகையில்,‘‘ உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றது மகிழ்ச்சி. எனது பயிற்சியாளர் விஜய் சர்மாவின் உதவி இல்லாமல் இந்த இலக்கை எட்டியிருக்க முடியாது. கடந்த ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படாதது ஏமாற்றமாக இருந்தது. தற்போது, தங்கம் வென்றதன் மூலம் அந்த வருத்தம் நீங்கிவிட்டது. எனது முழுத்திறமையை வெளிப்படுத்தி, எதிர் வரும் காமன்வெல்த், ஆசிய விளையாட்டு மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் (2020) பதக்கம் வெல்ல முயற்சிப்பேன்,’’ என்றார்.

இந்திய பளுதுாக்குதல் கூட்டமைப்பு செயலர் சக்தேவ் யாதவ் கூறுகையில்,‘‘ ஒலிம்பிக் போட்டியை விட உலக சாம்பியன்ஷிப் மிகவும் கடினமானது. இதில் மீராபாய் சானு தங்கம் கைப்பற்றியது மகிழ்ச்சியாக உள்ளது,’’ என்றார்.

முயற்சிக்கு வெற்றி

கடந்த 2014ல் கஜகஸ்தானின் அல்மாட்டி நகரில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் 48 கி.கி., பிரிவில் மீராபாய் 11வது இடமே பிடித்தார். பின், 2015ல் அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடந்த தொடரில் 9வது இடமே கிடைத்தது. இருப்பினும், தொடர் முயற்சியால், இம்முறை தங்கத்தை வசப்படுத்தினார். சமீபத்தில், ஆஸ்திரேலியாவில் நடந்த ‘சீனியர்’ பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றதன் மூலம், காமன்வெல்த் (2018, கோல்டுகோஸ்ட்) விளையாட்டிற்கு தகுதி பெற்றுள்ளார். இதிலம் மீராபாய் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

16வது பதக்கம்

இது, உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு கிடைத்த 16வது பதக்கம். இதுவரை இந்தியா சார்பில் 3 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கலம் கைப்பற்றப்பட்டது. தவிர, உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற 6வது இந்திய வீராங்கனையானார் மீராபாய். இதற்கு முன், கர்ணம் மல்லேஸ்வரி (1994, 95– தங்கம், 1993,96– வெண்கலம்), குஞ்சாராணி தேவி (1989, 91, 92, 94, 95, 96, 97– வெள்ளி), நீலம் சேதி (1995– வெள்ளி, 97– வெண்கலம்), லலிதா பாலி (1989– வெண்கலம்), பாரதி சிங் (1993– வெண்கலம்) ஆகியோர் பதக்கம் வென்றிருந்தனர்.

ஜனாதிபதி வாழ்த்து

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘ உலக பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு வாழ்த்துக்கள். உங்களால் இந்தியா பெருமை கொள்கிறது. இப்படிப்பட்ட வீராங்கனையை அளித்த மணிப்பூர் மாநிலத்திற்கு நன்றி,’ என, தெரிவித்துள்ளார்.

மோடி பாராட்டு

பிரதமர் மோடி ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில்,‘ உலக பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற மீராபாய் சானுவை பாராட்டுகிறேன். உங்களின் கடின உழைப்பிற்கு வாழ்த்துக்கள்,’ என, தெரிவித்துள்ளார்.

அமைச்சர் புகழாரம்

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில்,‘ மீராபாய் சானு 48 கி.கி., பிரிவில் 194 கி.கி., எடை துாக்கி தங்கம் வென்றுள்ளார். இது, இவரின் உடல் எடையை விட 4 மடங்கு அதிகம். விளையாட்டில் எப்போதும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது,’ என, தெரிவித்துள்ளார்.

Advertisement

இங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது ஒரு நாள் ஆட்டம்
இங்கிலாந்தில் இந்தியா, 3 ஓடிஐ தொடர்கள், 2018
7/17/2018 , 17:00
ஹெட்டிங்லேய், லீட்ஸ்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
1   0  
manavalan 8 months ago | Report abuse
congratulations, because of you, today Indian flag is flying very high in the world. ,


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
1   0  
suman 8 months ago | Report abuse
Congratulations மீராபாய்


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
1   0  
S.THIRUGNANAM 8 months ago | Report abuse
மென்மேலும் பலவெற்றிகள் பெற்று இந்தியாவுக்கு புகழ் சேர்க்க வாழ்த்துக்கள்...




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?