Advertisement


ஐ.எஸ்.எல்.,: மும்பைக்கு முதல் வெற்றி

நவம்பர் 25, 2017.
 Comments  
 


isl
 

மும்பை: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில், மும்பை அணி 2–1 என்ற கோல் கணக்கில் கோவா அணியை வீழ்த்தி, முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 4வது சீசன் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று, மும்பையில் நடந்த லீக் போட்டியில், மும்பை, கோவா அணிகள் மோதின. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட மும்பை அணிக்கு 59வது நிமிடத்தில் எவர்டன் சான்டோஸ், முதல் கோல் அடித்தார். இதற்கு, 83வது நிமிடத்தில் கோவா அணியின் மானுவல் அரானா, ஒரு கோல் அடித்து பதிலடி தந்தார். பின், 88 வது நிமிடத்தில் மும்பை வீரர் தியாகோ சான்டோஸ், தன்பங்கிற்கு ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். தொடர்ந்து போராடிய கோவா அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை.

ஆட்டநேர முடிவில் மும்பை அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி, இந்த சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. சமீபத்தில் பெங்களூரு அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்திருந்தது.

முதல் போட்டியில் சென்னையை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் துவக்கிய கோவா அணி, முதல் தோல்வியை பெற்றது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?