Advertisement


ஏடிபி பைனல்ஸ்: டிமிட்ரோவ் சாம்பியன்

நவம்பர் 20, 2017.
 Comments  
 


Dimitrov beats Goffin to win ATP Finals tennis
 

லண்டன்: ஏ.டி.பி., ‘வேர்ல்டு டூர் பைனல்ஸ்’ டென்னிஸ் தொடரில், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில், பெல்ஜியத்தின் டேவிட் கோபினை தோற்கடித்தார்.

லண்டனில், ஏ.டி.பி., ‘வேர்ல்டு டூர் பைனல்ஸ்’ டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில், கிரிகோர் டிமிட்ரோவ், பெல்ஜியத்தின் டேவிட் கோபின் மோதினர். முதல் செட்டை டிமிட்ரோவ் 7–5 என போராடி கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட கோபின், 2வது செட்டை 6–4 என தன்வசப்படுத்தி பதிலடி தந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில், சுதாரித்துக் கொண்ட டிமிட்ரோவ் 6–3 என வென்றார்.

முடிவில், டிமிட்ரோவ் 7–5, 4–6, 6–3 என்ற கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக கோப்பை வென்றார். இதன்மூலம், 19 ஆண்டுகளுக்கு பின், அறிமுக வீரர் ஒருவர் இத்தொடரில் கோப்பை வென்றுள்ளார். இதற்கு முன், 1998 ல், அறிமுக வீரராக களமிறங்கிய ஸ்பெயினின் அலெக்ஸ் கோரெட்ஜா, கோப்பை வென்றிருந்தார்.

தரவரிசையில் முன்னேற்றம்

இந்த வெற்றியின்மூலம், ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 6வது இடத்தில் இருந்த டிமிட்ரோவ், முதன்முறையாக ‘நம்பர்–3’ இடத்துக்கு முன்னேறினார். முதலிரண்டு இடங்களில் முறையே ஸ்பெயின் ரபெல் நடால், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் நீடிக்கின்றனர்.

ராசியான ஆண்டு

பல்கேரியாவின் டிமிட்ரோவுக்கு, இந்த ஆண்டு ராசியானதாக அமைந்தது. ஆஸ்திரேலிய ஓபனில் அரையிறுதி வரை சென்ற இவர், சின்சினாட்டி ஓபனில் கோப்பை வென்று, தனது முதல் மாஸ்டர்ஸ் பட்டம் வென்றார். தற்போது, ‘வேர்ல்டு டூர் பைனல்ஸ்’ தொடரிலும் கோப்பை வென்று சாதித்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?