Advertisement


பயஸ் ஜோடி சாம்பியன்

நவம்பர் 19, 2017.
 Comments  
 


Paes, ATP Challenger Tennis
 

இல்லினாய்ஸ்: அமெரிக்காவில் நடந்த ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் பயஸ், புரவ் ராஜா ஜோடி பட்டம் வென்றது. 

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியில் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் நடந்தது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் பயஸ், புரவ் ராஜா ஜோடி, தென் ஆப்ரிக்காவின் ருயன், பிரிட்டனின் ஜோ ஷாலிஸ்பரி ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 6–3 என கைப்பற்றிய பயஸ் ஜோடி, அடுத்த செட்டை 6–7 என பறிகொடுத்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் எழுச்சி பெற்ற இந்திய ஜோடி 10–5 என வசப்படுத்தியது. ஒரு மணி நேரம் 44 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில், பயஸ், புரவ் ராஜா ஜோடி 6–3, 6–7, 10–5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை கைப்பற்றியது. 

இரண்டாவது பட்டம்: இதன் மூலம் பயஸ், புரவ் ஜோடி இந்த ‘சீசனில்’ தொடர்ந்து 2வது சாலஞ்சர் தொடரை கைப்பற்றியது. இதற்கு முன், நாக்ஸ்வில்லே தொடரில் பட்டம் வென்றிருந்தது. பயசை பொறுத்தவரை, இந்த ஆண்டில் தனது 5வது ஏ.டி.பி., தொடரை கைப்பற்றினார். இதற்கு முன், லியான் (மெக்சிகோ), டலாஹாசி (அமெரிக்கா), ஏகான் (பிரிட்டன்), நாக்ஸ்வில்லே (அமெரிக்கா) தொடரில் கோப்பையை வசப்படுத்தி இருந்தார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?