Advertisement


தோனியை குறை கூறும் முன்... * ரவி சாஸ்திரி ஆதரவு

நவம்பர் 14, 2017.
 Comments  
 


dhoni, ravi shastri india cricket
 

கோல்கட்டா: ‘‘பொதுவாக மற்றவர்கள் குறித்து விமர்சனம் தெரிவிக்கும் முன், தங்களது கடந்த கால கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பார்த்து விட்டு பேச வேண்டும்,’’ என, இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தார். 

இந்திய அணியின் ‘சீனியர்’ வீரர் தோனி. 37. கடந்த 2014ல் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த ஆண்டு ஜனவரி மாதம், ஒருநாள், ‘டுவென்டி–20’அணிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய இவர், வீரராக மட்டும் விளையாடி வருகிறார்.

சமீபத்திய நியூசிலாந்துக்கு எதிரான ராஜ்கோட் ‘டுவென்டி–20’ போட்டியில், தோனி மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக விமர்சனம் எழுந்தது. லட்சுமண், அகார்கர், ஆகாஷ் சோப்ரா என, பல முன்னாள் வீரர்கள், இளம் வீரர்களுக்கு தோனி வழி விட வேண்டும் என்றனர். 

இவ்விஷயத்தில் இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தோனிக்கு ஆதரவு தந்தனர். தற்போது இதுகுறித்து ரவி சாஸ்திரி மீண்டும் கூறியது:

முன்னாள் கேப்டனான தோனியிடம் இன்னும் நிறைய திறமைகள் உள்ளன. இப்போதைய நிலையில் இவருக்கு மாற்றான வீரர் யாரும் இல்லை. விக்கெட் கீப்பிங் பணி மட்டுமன்றி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படுகிறார். 

கில்லாடி வீரர்

களத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுப்பதில் கில்லாடியாக உள்ளார். இந்த ‘ஜாம்பவானுக்கு’ ஆதரவு தருவது தான், இந்திய அணியின் கடமை. தோனி குறித்து விமர்சனம் செய்பவர்கள், தங்களது கிரிக்கெட் வாழ்க்கை எப்படி இருந்தது என்பது குறித்து முதலில் பார்த்துக் கொள்ள வேண்டும். 

இந்திய அணி வீரர்கள் பீல்டிங்கில் உலகளவில் சிறப்பாக செயல்படுகின்றனர். இதற்கு முன் இருந்த இந்திய அணிகளுக்கும், இப்போதைய அணிக்கும் இது தான் முக்கிய வித்தியாசம். 

வெற்றி கிடைக்கும்

கோஹ்லியின் இப்போதைய அணி, எப்போதும் வெற்றி பெறவே விரும்பும். இதனால், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெறுவோம் என நம்புகிறேன். தவிர, தென் ஆப்ரிக்க தொடருக்கு முன் மீதமுள்ள வரும் ஒருநாள், ‘டுவென்டி–20’ போட்டிகளிலும் வெற்றி தொடர விரும்புகிறோம்.

இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.

 

புஜாரா, அஷ்வின் பயிற்சி

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட், நாளை கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்குகிறது. இதற்காக இந்தியாவின் புஜாரா நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். சமீபத்தில் முதல் தர கிரிக்கெட்டில், 12வது இரட்டைசதம் அடித்த இவர், நேற்று ‘ஷார்ட் பிட்ச்’ பந்துகளை எதிர்கொண்டு, 45 நிமிடம் பயிற்சி செய்தார். 

போதிய வெ ளிச்சமின்மை காரணமாக மற்ற இந்திய வீரர்கள் ‘டிரசிங் ரூம்’ திரும்பிய போதும், ‘சுழல்’ வீரர் அஷ்வின் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டார்.

 

இரண்டாவது வாய்ப்பு இல்லை

மேற்குவங்க கிரிக்கெட் சங்கத் தலைவர், முன்னாள் கேப்டன் கங்குலி கூறுகையில்,‘‘ நிர்வாகியாக இருப்பதை விட, வீரராக இருப்பது கடினம். இங்கு ஒருமுறை தோற்றால், மீண்டும் வரலாம். ஆனால், களத்தில் அப்படியல்ல. விளையாடுவது கடினம். வீரர்களுக்கு மறு வாய்ப்பு இல்லை. இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் சிறப்பாக உள்ளது,’’ என்றார்.

 

பதறிய கோஹ்லி

நேற்று கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய கேப்டன் கோஹ்லி வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது, ஷமி வீசிய பந்து இவரின் ‘பேட்டில்’ சிக்காமல், வலையை தாண்டி சென்றது. அந்த பந்து, பயிற்சியை பதிவு செய்ய வந்திருந்த ‘டிவி’ குழு ஊழியர் ஒருவரின் நெற்றியில் தாக்கியது. பதறிப்போன கோஹ்லி பயிற்சியை நிறுத்திவிட்டு ஷமியுடன் இணைந்து அவரிடம் உடல்நலம் விசாரித்தார். பின், அணி ‘பிசியோதெரபிஸ்ட்’ அந்த நபருக்கு சிகிச்சை அளித்தார். இதை உறுதி செய்த பின், கோஹ்லி மீண்டும் பயிற்சியை துவக்கினார். 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?