Advertisement


ரெய்னாவுக்கு சென்னை ‘நோ’

நவம்பர் 14, 2017.
 Comments  
 


chennai super kings raina, cricket gujarat
 

சென்னை: சென்னை அணியில் இருந்து ரெய்னா உள்ளிட்ட பல வீரர்கள் கழற்றி விடப்படுவர் எனத் தெரிகிறது.

கடந்த 2013ல் நடந்த ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் ஏற்பட்ட சூதாட்ட பிரச்னையால், சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டு (2016, 2017) தடை விதிக்கப்பட்டது. 

இந்த இரு அணிகளின் பெரும்பாலான வீரர்கள் புதியதாக உருவான குஜராத், புனே அணிக்கு சென்றனர்.

தற்போது தடை முடிந்த நிலையில் இந்த ஆண்டு முதல் சென்னை, ராஜஸ்தான் அணிகள் தொடரில் பங்கேற்க உள்ளன. இதற்கான வீரர்கள் ஏலம் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. இதில் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பர் எனத் தெரிகிறது.

இதற்கிடையே, வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும் ‘பாலிசி’ விதிப்படி,  வரும் 21ம் தேதிக்குள் ஒவ்வொரு அணியும் 2 இந்தியா, ஒரு வெ ளிநாடு என, மொத்தம் 3 வீரர்களைத் தவிர, மற்றவர்களை விடுவிக்க வேண்டும்.

இதன் படி, சென்னை, ராஜஸ்தான் அணிகள், புனே மற்றும் குஜராத் அணியில் இருந்து தலா 3 வீரர்களை எடுத்துக் கொள்ளலாம். இந்த அடிப்படையில் புனே அணியில் உள்ள தோனி, மீண்டும் சென்னைக்கு திரும்புவது உறுதியாகி உள்ளது. தவிர, முன்னணி ‘சுழல்’ வீரர் அஷ்வின், டுபிளசியை தக்க வைக்க அணி முடிவு செய்துள்ளதாம்.

ரெய்னா இல்லை

இதனால் 8 ஆண்டுகள் அசத்தல் ஆட்டத்தை வெ ளிப்படுத்தி, தமிழக ரசிகர்களை கவர்ந்த ரெய்னா, சென்னை அணிக்காக இனிமேல் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது. தவிர, இவர் குஜராத் அணி கேப்டனாக இருப்பதால், சென்னை வருவது சிரமம் தான். இதேபோல, ‘ஆல் ரவுண்டர்’ பிராவோவும், சென்னை அணிக்கு வருவது சந்தேகமாக உள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?