Advertisement


வங்கதேசத்திடம் வீழ்ந்தது இந்தியா

நவம்பர் 14, 2017.
 Comments  
 


Asia cup cricket india loss bangladesh
 

கோலாலம்பூர்: ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது இளம் இந்திய அணி. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் வங்கதேசத்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

மலேசியாவில் ஆசிய கோப்பை (19 வயதுக்குட்பட்ட) ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள், இரு முதல் போட்டியில் மலேசியாவை வென்ற இந்திய அணி, அடுத்து நேபாளத்திடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

மூன்றாவது மற்றும் கடைசி லீக் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில், நேற்று வங்கதேசத்தை சந்தித்தது. ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி, பீல்டிங் தேர்வு செய்தது.

மழை காரணமாக தலா 32 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது. முதலில் விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் ஹிமான்சு ராணா (15), ரியான் (19) ஏமாற்றம் தந்தனர். ராவத் (34), சல்மான் கான் (39) தவிர, மற்றவர்கள் அணியை கைவிட்டனர். இந்திய அணி 32 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்தது.

மீண்டும் ‘ஷாக்’

அடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு பினாக் கோஷ் அரைசதம் அடித்து உதவினா். ஷேக் (38), கேப்டன் ஹசன் (16) ஆறுதல் தர, வங்கதேச அணி 28 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோஷ் (81), தவ்ஹித் (48) அவுட்டாகாமல் இருந்தனர்.

இதையடுத்து 3 போட்டி முடிவில், 2 புள்ளியுடன் 3வது இடம் பிடித்த இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறியது. வங்கதேசம் (6), நேபாளம் (4) இப்பிரிவில் இருந்து, அரையிறுதிக்கு முன்னேறியது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?