Advertisement


ஆசிய கால்பந்து: இந்தியா ‘டிரா’

நவம்பர் 14, 2017.
 Comments [1]  
 


2019 AFC Asian Cup qualification Third Round INDIA
 

கோவா: இந்தியா, மியான்மர் அணிகள் மோதிய ஆசிய கோப்பை கால்பந்து, தகுதிச்சுற்று போட்டி 2–2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. 

ஐக்கிய அரபு எமிரேட்சில் (2019, ஜன.5– பிப். 1), 17வது ஆசிய கோப்பை கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. இதற்கான மூன்றாவது சுற்று தகுதி போட்டியில், இந்திய அணி ‘ஏ’ பிரிவில், கிர்கிஸ்தான், மக்காவ், மியான்மர் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. 

ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். முதல் மூன்று போட்டிகளில் மியான்மர் (1–0), கிர்கிஸ்தான் (1–0), மக்காவ் (2–0) அணிகளை வென்றது இந்தியா. தற்போது இரண்டாவது சுற்று போட்டிகள் நடக்கின்றன. 

இதன் முதல் போட்டியில் மக்காவை (4–1) வென்ற இந்தியா (105வது ‘ரேங்க்’), 155 வது இடத்தில் உள்ள மியான்மரை நேற்று சந்தித்தது. போட்டி துவங்கிய 20வது வினாடியில் மியான்மர் வீரர் நெய்ங், ஒரு கோல் அடித்தார். 13வது நிமிடம் இந்திய அணிக்கு ‘பெனால்டி’ கிடைத்தது. 

இதை, இந்திய அணி கேப்டன் சுனில் செத்ரி, வீணாக்காமல் கோலாக மாற்ற, ஸ்கோர் 1–1 என, சமன் ஆனது. தவிர, இது இந்திய அணிக்காக சுனில் செத்ரி அடித்த 57 வது கோலாக அமைந்தது. 19வது நிமிடத்தில் மியான்மரின் கோ கோ ஒரு கோல் அடித்தார். 

இதைச் சமன் செய்ய கிடைத்த வாய்ப்புகளை, கெர்மன்பிரீத் சிங் (29வது), சந்தேஷ் ஜின்கன் (39 வது) வீணாக்கினர். இதனால், முதல் பாதியில் இந்திய அணி 1–2 என, பின் தங்கியது. 

இரண்டாவது பாதியில் இந்திய வீரர் ஜீஜே (69 வது நிமிடம்) ஒரு கோல் அடித்த உதவ, ஸ்கோர் மீண்டும் சமன் (2–2) ஆனது. இதன் பின் இரு அணியினரும் கோல் எதுவும் அடிக்கவில்லை. முடிவில், 2–2 என்ற கோல் கணக்கில் போட்டி ‘டிரா’ ஆனது. 

 

 

13

சர்வதேச கால்பந்து அரங்கில் இந்திய அணி தொடர்ந்து வெற்றிகரமாக வலம் வருகிறது. கடைசியாக பங்கேற்ற 13 போட்டிகளில் 11 வெற்றி, 2 ‘டிரா’ செய்தது. 

 

5

ஆசிய கோப்பை கால்பந்து தொடர், மூன்றாவது சுற்று தகுதி சுற்றில், இதுவரை இந்திய அணி விளையாடிய 5 போட்டியில் 4 வெற்றி, 1 ‘டிரா’ என, மொத்தம் 13 புள்ளிகள் பெற்றது. தவிர, ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்து, ஆசிய கோப்பை தொடருக்கு 4வது முறையாக (1964, 1984, 2011, 2019) தகுதி பெற்றது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Ravichandran Muthuvel 7 days ago | Report abuse
இந்திய கால்பந்தாட்ட அணி, 2019 ஆம் ஆண்டு ஆசியக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்...




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?