Advertisement


சோகத்துடன் விடை பெற்றார் புபான்

நவம்பர் 14, 2017.
 Comments  
 


buffon
 

மிலன்: உலக கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெறாத சோகத்தில் இத்தாலி கோல்கீப்பர் புபான் ஓய்வை அறிவித்தார். 

இத்தாலி கால்பந்து அணியின் அனுபவ கோல்கீப்பர் புபான், 39. இதுவரை 5 உலக கோப்பை தொடரில் பங்கேற்ற பெருமை கொண்டவர். இந்நிலையில், ஐரோப்பிய அணிகளுக்கான உலக கோப்பை (ரஷ்யா, ஜூன் 14–ஜூலை 15, 2018) இரண்டாவது தகுதிச்சுற்றில் விளையாடி வந்தார். சுவீடன் அணிக்கு எதிரான முதல் சுற்றுப்போட்டியில் இத்தாலி வீழ்ந்தது. இரண்டாவது போட்டியில் அதிக கோல் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே, உலக கோப்பையில் இடம் என்ற இக்கட்டான நிலையில் இத்தாலி களமிறங்கியது. மிலன் நகரில் நடந்த இப்போட்டி கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது. இதனால், சுவீடன் அணி முதல் போட்டியில் வென்றதன் (1–0) அடிப்படையில் பிரதான சுற்றுக்குள் நுழைந்தது. 

60 ஆண்டுக்குப்பின்...

நான்கு முறை (1934,38, 82, 2006)) உலக சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி அணி 60 ஆண்டுக்குப்பின் உலக கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தது. கடைசியாக, 1958ல் சுவீடனில் நடந்த தொடருக்கு தகுதி பெறாமல் இருந்தது. இந்த ஏமாற்றத்தில், புபான் சர்வதேச கால்பந்து அரங்கிலிருந்து ஓய்வு பெற்றார். தேசிய அணிக்காக கடந்த 20 ஆண்டாக (175 போட்டி ) விளையாடி வந்த இவர், கண்ணீர் கசிந்த கண்களுடன் ரசிகர்களிடமிருந்து விடை பெற்றார். தொடர்ந்து 6 உலக கோப்பையில் களமிறங்கிய முதல் வீரர் என்ற சாதனையை எட்ட தவறினார். 

மன்னிப்பு:

இது குறித்து புபான் கூறுகையில்,‘‘ உலக கோப்பை தொடருக்கு முன்னேற முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இப்போட்டி எனக்கு கடைசியாக அமைந்தது வருத்தமாக உள்ளது. இதற்கு, வீரர்கள் அனைவரும் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். இந்த சோகத்தில் கண்ணீர் வந்தாலும், இதை நான் விரும்பவில்லை. ஏனெனில், இத்தாலி அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவில் உள்ள பலர் ‘டிவியை’ பார்த்துக் கொண்டிருப்பர். இவர்களின் மனம் பாதிக்கப்படக்கூடாது,’’ என்றார். 

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?