Advertisement


ஏ.டி.பி., பைனல்ஸ்: நடால் விலகல்

நவம்பர் 14, 2017.
 Comments  
 


nadal
 

லண்டன்: ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடரிலிருந்து ஸ்பெயின் வீரர் நடால் விலகினார். 

ஸ்பெயின் டென்னிஸ் நட்சத்திரம் ரபெல் நடால், 31. தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இவர், இந்த ஆண்டு பிரெஞ்ச் மற்றும் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் பட்டம் வென்றார். சமீபத்திய, பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடரில் வலது முழங்கால் காயம் காரணமாக விலகினார். இதற்கிடையே, தரவரிசையில் ‘டாப்–8’ வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி., பைனல்ஸ் தொடரில் லண்டனில் துவங்கியது. தலா 4 வீரர்கள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, காயத்தால் அவதிப்பட்டு வந்த நடால் இதில் பங்கேற்றார். 

இவர் தனது முதல் லீக் போட்டியில் பெல்ஜியத்தின் டேவிட் காபினை எதிர் கொண்டார். முதல் செட்டை 6–7 என இழந்த நடால் அடுத்த செட்டை 7–6 என கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் ஏமாற்றிய இவர் 4–6 என பறிகொடுத்தார். முடிவில், நடால் 6–7, 7–6, 4–6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். தவிர, உடற்தகுதியும் சிறப்பாக இல்லாத காரணத்தால் இத்தொடரிலிருந்து விலகினார். 

கைகொடுக்குமா சிகிச்சை:

இது குறித்து நடால் கூறுகையில்,‘‘ ஏ.டி.பி., பைனல்ஸ் தொடருக்காக முடிந்தளவு தயாராகி வந்தேன். முதல் போட்டியில் பங்கேற்றபோது முழங்கால் வலி அதிகரித்தது. தொடர்ந்து விளையாடும் அளவுக்கு உடலில் வலிமை இல்லை. இதனால், இத்தொடரிலிருந்து விலகுகிறேன். இத்துடன், இந்த ‘சீசனையும்’ முடித்துக்கொள்கிறேன். இனி, அடுத்த ஆண்டில் போட்டியில் பங்கேற்பதற்காக உடற்தகுதி பெற வேண்டும். காயத்திற்கான சிகிச்சை கைகொடுக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்,’’ என்றார். 

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?