Advertisement


இலக்கு ‘7’...இப்போ ‘4’ * ரொனால்டோ மீண்டும் தந்தை

நவம்பர் 13, 2017.
 Comments  
 


Cristiano Ronaldo Welcomes a Daughter With Girlfriend Georgina Rodriguez
 

மாட்ரிட்: போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, நான்காவது குழந்தைக்கு அப்பா ஆனார். இவரது தோழி ஜார்ஜினா ரோட்ரிக்சிற்கு, பெண் குழந்தை பிறந்துள்ளது.

உலகின் முன்னணி கால்பந்து வீரர் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 32. இவரது ஜெர்சி நம்பர் 7. தனது ராசியான நம்பர் போல, 7 குழந்தைகளுக்கு அப்பாவாக விரும்புவதாக தெரிவித்திருந்தார். இதற்கேற்ப வாடகை தாய் மூலம் பிறந்த மகனுக்கு கிறிஸ்டியானோ ஜூனியர், 7, என பெயர் வைத்தார். கடந்த ஜூன் மாதம், மீண்டும் வாடகை தாய் உதவியுடன், ஆண், பெண் என இரட்டை குழந்தைகளுக்கு அப்பா ஆனார். இவர்களுக்கு எவா, மாட்டேவ் என பெயர் சூட்டினார்.

இந்நிலையில் ரொனால்டோவின் தோழி ஜார்ஜினா ரோட்ரிக்சிற்கு, 23, அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதன்மூலம் நான்காவது குழந்தைக்கு அப்பா ஆனார். இக்குழந்தைக்கு அலானா மார்டினா என பெயர் வைத்துள்ளார். இம்முறை தான் குழந்தையின் தாய், யார் என்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்த தகவலை, புகைப்படத்துடன் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ரொனால்டோ. இதில், ‘ஜார்ஜினா, அலானா இருவரும் நலமுடன் உள்ளனர்,’ என, குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?