Advertisement


இலங்கை அணியின் வினோத பவுலர்

நவம்பர் 13, 2017.
 Comments  
 


Kevin Koththigoda, Sri Lankan latest mystery spinner who bowls like Paul Adams
 

கோலாலம்பூர்: இலங்கை அணியின் இளம் வீரர் கெவின் கோத்திகோடா, வினோதமான முறையில் பவுலிங் செய்கிறார்.

ஆசிய கோப்பை (19 வயதுக்குட்பட்ட) ஒருநாள் கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடக்கிறது. இதில் இலங்கை அணிக்காக விளையாடுகிறார் கெவின் கோத்திகோடா, 18. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அறிமுகம் ஆனார் கெவின். இதில் 8 ஓவர் பவுலிங் செய்த இவர், 29 ரன்கள் கொடுத்து, 1 விக்கெட் வீழ்த்தினார்.

இலங்கையின் காலே அருகில் உள்ள உனவதுனா என்ற இடத்தை சேர்ந்தவர். இவரது பவுலிங், தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் ‘சைனாமேன்’ பவுலர் பால் ஆடம்ஸ் (இடது கை) போல, உள்ளது. அப்படியே ஓடி வந்து தலையை கீழாக இறக்கி, கையை உயர்த்தி பவுலிங் செய்கிறார். இவரைப் பார்ப்பதற்கு, வலது கை ‘பால் ஆடம்ஸ்’ போல உள்ளார்.

இவரைப் போல எதிர்காலத்தில், இலங்கை அணியின் வெற்றிக்கு கைகொடுப்பார் என்று நம்பப்படுகிறது. இலங்கை ‘ஏ’ அணியின் முன்னாள் வீரர் தம்மிகா சுதர்சனா கூறுகையில்,‘‘ பால் ஆடம்ஸ் போல, மிகவும் வித்தியாசமாக பவுலிங் செய்கிறார் கெவின். இயற்கையாகவே இவரது ‘ஆக் ஷன்’ இப்படித் தான் உள்ளது. தலையை கீழே இறக்கி விடுவதால், துவக்கத்தில் ஆடுகளத்தில் பந்தை சரியாக ‘பிட்ச்’ செய்ய சிரமப்பட்டார். இப்போது வியக்கத்தக்க வகையில் முன்னேறி விட்டார்,’’ என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?