Advertisement


முதல் சவாலை சமாளிக்க இந்தியா ‘ரெடி’ * கோல்கட்டாவில் தீவிர பயிற்சி

நவம்பர் 13, 2017.
 Comments  
 


India focus on reverse sweep, short balls Cricket
 

 கோல்கட்டா: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் சாதிக்க, இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். ‘ஷார்ட் பிட்ச்’ பந்தை எதிர்கொள்வது, ‘சுவீப் ஷாட்’ முறையில் அடித்து விளையாடுவதில் அதிக கவனம் செலுத்தினர். 

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட், வரும் 16ம் தேதி கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்குகிறது. சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள், ‘டுவென்டி–20’ தொடரை கைப்பற்றிய உற்சாகத்தில் உள்ள இந்திய அணி வீரர்கள், சிறிய இடைவெ ளிக்குப் பின், மீண்டும் பயிற்சிக்கு திரும்பினர். 

இலங்கை அணி வீரர்களின் ‘ஷார்ட் பிட்ச்’ பந்துகளை எதிர்கொள்ளும் வகையில், ரகானே நீண்ட நேரம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். இது இலங்கை தொடருக்கு மட்டுமன்றி, வரும் தென் ஆப்ரிக்க தொடருக்கும் உதவும் என்ற திட்டத்தில் இதுபோன்ற பயிற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இவருக்குப் பின், ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் என, இருவரும் ‘வேகங்கள்’ மற்றும் ‘சுழல்’ பந்துவீச்சில் பேட்டிங் பயிற்சி செய்தனர். ‘சுழல்’ பவுலிங்கில் ‘சுவீப் ஷாட்’ அடித்து பழகினர். 

கோஹ்லி வருகை

இதன் பின் வந்த கேப்டன் கோஹ்லி, சுமார் இரண்டரை மணி நேரம் பயிற்சியில் ஈடுபட்டார். இவருக்கு ‘வேகம்’ மற்றும் ‘சுழல்’ என, மாறி மாறி பவுலிங் செய்யப்பட்டது. இதுகுறித்து இந்திய அணி விக்கெட் கீப்பர் சகா கூறுகையில்,‘‘ குறிப்பிட்ட பவுலர்களுக்கு எதிராக மட்டும் திட்டமிட்டு செயல்படவில்லை. ஒரு சில பந்துகளை எப்படி எதிர்த்து விளையாடுவது என பயிற்சி செய்தோம். புஜாரா, ஜடேஜா இருவரும் ரஞ்சி போட்டியில் பங்கேற்றனர். இவர்கள் இந்திய அணியுடன் இணைந்து விட்டாலும், நாளை முதல் பயிற்சியில் ஈடுபடுவர்,’’ என்றார்.

‘பிட்ச்’ எப்படி

கோல்கட்ட ஆடுகளம் இந்திய அணி துவக்க வீரர் ரோகித் சர்மாவுக்கு ராசியானது. மூன்று ஆண்டுக்கு முன், இங்கு இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் எடுத்த இவர், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்த முதல் வீரர் என உலக சாதனை படைத்தார். இவர் நேற்று ஆடுகளத்தை பார்வையிட்டார். தவிர, ரகானே, பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் ஆடுகளத்தை பார்த்தனர்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?