Advertisement


சகா எதிர்பார்ப்பு

நவம்பர் 13, 2017.
 Comments  
 


opening Test India wicketkeeper Wriddhiman Saha
 

கோல்கட்டா: இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட், வரும் 16ல் கோல்கட்டாவில் துவங்குகிறது. இப்போட்டி குறித்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விரிதிமன் சகா கூறியது: பொதுவாக எந்த ஒரு தொடரையும் வெற்றியுடன் துவக்க வேண்டும். இது, அடுத்து வரும் போட்டிகளுக்கு ஊக்கமாக அமையும். எனவே இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெறுவதே எங்களது முதல் இலக்கு.

ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது தான். எந்த ஒரு அணியையும் குறைத்து மதிப்பிடாமல், முழுத்திறமையை வெளிப்படுத்தினால் சுலபமாக வெற்றி பெறலாம். தென் ஆப்ரிக்க தொடருக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளன. தற்போது கவனம் முழுவது இலங்கைக்கு எதிரான தொடரில் மட்டுமே உள்ளது.

விக்கெட் கீப்பராக, அஷ்வின் ‘சுழலை’ எதிர்கொள்வது சவாலானது. ஏனெனில் ஒவ்வொரு பந்தையும் வித்தியாசமாக வீசுவதால், கணிப்பது சற்று கடினமாக இருக்கும். இவர், குல்தீப் யாதவ், ரவிந்திர ஜடேஜாவை விட, பந்துவீசுவதில் வித்தியாசம் காட்டுகிறார். விக்கெட் கீப்பிங்கின் போது, பவுலர்கள் பந்தை ‘ரிலீஸ்’ செய்வதை கவனமாக பார்க்க வேண்டியது அவசியம். அப்போது தான்,  பேட்ஸ்மேனை தாண்டி வரும் பந்துகளை ‘கேட்ச்’ செய்ய முடியும்.

கேப்டன் கோஹ்லி, ‘சிலிப்’ பகுதியில் ‘பீல்டிங்’ செய்வதால், அவ்வப்போது ‘பீல்டிங்’ குறித்து ஆலோசனை வழங்குவேன். ஆனால், இறுதி முடிவை கேப்டன் மட்டுமே எடுப்பார். ‘டி.ஆர்.எஸ்.,’ முறையின் போது, நுாறு சதவீத நம்பிக்கை இருந்தால் மட்டுமே, கேப்டனிடம் தெரிவிப்பேன். சந்தேகமாக இருந்தால், அவரது முடிவுக்கு விட்டுவிடுவேன்.

இவ்வாறு விரிதிமன் சகா கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?