Advertisement


பாதை மாறிய குல்தீப் யாதவ்

நவம்பர் 13, 2017.
 Comments  
 


Kuldeep yadav india chinaman bowler cricket
 

 கோல்கட்டா: இந்திய அணியின் புதிய ‘சுழல்’ வரவு குல்தீப் யாதவ், 22. ‘சைனா மேன்’ முறையில் அசத்தும் இவர், ‘நம்பர்–1’ ‘சுழல்’ வீரர்களான அஷ்வின், ஜடேஜாவை பின் தள்ளி, ஒருநாள், ‘டுவென்டி–20’ அணியில் தவிர்க்க முடியாத பவுலராகி விட்டார்.

இதுவரை 2 டெஸ்ட் (9 விக்.,), 12 ஒருநாள் (19 விக்.,), 5 ‘டுவென்டி–20’ (6 விக்.,) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இளவயதில் கிரிக்கெட்டுக்காக பட்ட சிரமங்கள் குறித்து குல்தீப் யாதவ் கூறியது:

பள்ளிப்படிப்பில் நான் மிகவும் கெட்டி. இருப்பினும் பொழுது போக்கிற்காக கிரிக்கெட் விளையாடத் துவங்கினேன். எனது அப்பாவும் இதை விரும்பினார். இவர் தான் பயிற்சியாளரிடம் அழைத்துச் சென்றார். கடைசியில் இதுவே எனது நிரந்தர பணியாக மாறும் என்று ஒருபோதும் நினைத்தது இல்லை.

துவக்கத்தில் வேகப்பந்து வீச்சாளராக வரவேண்டும் என்று விரும்பினேன். மாறாக, பயிற்சியாளர் தான் என்னை சுழற்பந்துவீச்சு பாதைக்கு மாற்றி விட்டார்.

அப்போது, சில நேரங்களில் ‘சைனா மேன்’ முறையில் பவுலிங் செய்து பார்த்தேன். இதன் பின் இதையே தொடருமாறு எல்லோரும் கேட்டுக் கொண்டனர். மற்றபடி, நான் வித்தியாசமாக பவுலிங் செய்கிறேனா என்றெல்லாம் எனக்குத் தெரியாது.

ஒருமுறை எனது 13 வயதில், உ.பி., அணியில் ( 15 வயதுக்குட்பட்ட) சேர்க்காமல் தேர்வாளர்கள் புறக்கணித்தனர். கடினமாக பயிற்சியில் ஈடுபட்டும், அணிக்கு தேர்வாகவில்லை என்பதால் சோகம் அதிகமாகியது. இந்த வேகத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்தேன். நல்லவேளை இது நடக்கவில்லை.

இவ்வாறு குல்தீப் யாதவ் கூறினார்.

Advertisement
Cricket logo
England - 196/4 (80.3)
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?