Advertisement


உலக கால்பந்து: குரோஷியா தகுதி

நவம்பர் 13, 2017.
 Comments  
 


world cup croatia vs greece
 

பிரேயஸ்: ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடருக்கு குரோஷிய அணி முன்னேறியது. இதற்கான தகுதிச் சுற்றில் 4–1 என கிரீசை வீழ்த்தியது.

ரஷ்யாவில், அடுத்த ஆண்டு (ஜூன் 14 – ஜூலை 15), 21வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. இதில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கவுள்ளன. தொடரை நடத்தும் ரஷ்ய அணி, நேரடியாக தகுதி பெற்றது. மற்ற அணிகளுக்கான முதல் கட்ட தகுதிச் சுற்றுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட பிரேசில், ஸ்பெயின், இங்கிலாந்து, ‘நடப்பு சாம்பியன்’ ஜெர்மனி, அர்ஜென்டினா உள்ளிட்ட 25 அணிகள் தகுதி பெற்றன.

குரோஷியா அபாரம்:

ஐரோப்பிய அணிகளுக்கான 2ம் கட்ட தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடக்கிறது. இதில் சுவிட்சர்லாந்து அணி 1–0 என வடக்கு அயர்லாந்தை வீழ்த்தி, பிரதான சுற்றுக்கு முன்னேறியது. மற்றொரு போட்டியில் குரோஷியா, கிரீஸ் அணிகள் மோதின. இதன் முதல் சுற்றுப் போட்டியில் குரோஷிய அணி 4–1 என வெற்றி பெற்றது. இரண்டாவது சுற்றுப் போட்டி, கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது. முடிவில், குரோஷிய அணி 4–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பைக்கு தகுதி பெற்றது. இதன்மூலம் குரோஷிய அணி, 5வது முறையாக (1998, 2002, 2006, 2014, 2018) உலக கோப்பையில் பங்கேற்க உள்ளது. இதில், 1998 ல் 3வது இடம் பிடித்தது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?