Advertisement


பயஸ் ஜோடி சாம்பியன்

நவம்பர் 13, 2017.
 Comments [1]  
 


Leander Paes, Purav Raja, ATP Knoxville Challenger, America
 

நாக்ஸ்வில்: ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், புரவ் ராஜா ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

அமெரிக்காவில் உள்ள நாக்ஸ்வில் நகரில், ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில், இந்தியாவின் லியாண்டர் பயஸ், புரவ் ராஜா ஜோடி, அமெரிக்காவின் ஜேம்ஸ் செரிடானி, ஆஸ்திரேலியாவின் ஜான்–பாட்ரிக் ஸ்மித் ஜோடியை சந்தித்தது.

அபாரமாக ஆடிய பயஸ், புரவ் ராஜா ஜோடி 7–6, 7–6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் இந்த ஜோடி, முதன்முறையாக கோப்பை வென்றது. தவிர இது, இந்த சீசனில் பயஸ் கைப்பற்றிய 4வது பட்டம். முன்னதாக மெக்சிகோ (மார்ச்), அமெரிக்கா (ஏப்ரல்), இங்கிலாந்தில் (ஜூன்) நடந்த ஏ.டி.பி., சாலஞ்சர் இரட்டையர் பிரிவுகளில் கோப்பை வென்றிருந்தார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
2   0  
Karthikeyan one week ago | Report abuse
பயஸ் 44 வயதிலும் நன்றாக விளையாடி கொண்டிருப்பது பாராட்டுக்குரியது..விளையாட்டுலக மார்க்கண்டேயன்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?