Advertisement


ரஞ்சி: தமிழக அணி ஏமாற்றம்

நவம்பர் 12, 2017.
 Comments  
 


Ranji Trophy Cricket, Tamil Nadu, Odisha, Mumbai, Baroda
 

கட்டாக்: தமிழகம், ஒடிசா அணிகள் மோதிய ரஞ்சி கோப்பை லீக் போட்டி ‘டிரா’ ஆனது. இதில், முதல் இன்னிங்சில் 3 ரன் பின்தங்கிய தமிழக அணி ஒரு புள்ளி மட்டுமே பெற்று ஏமாற்றம் அடைந்தது.

ஒடிசா மாநிலம் கட்டாக்கில், தமிழகம், ஒடிசா அணிகள் மோதிய ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ‘சி’ பிரிவு லீக் போட்டி நடந்தது. முதல் இன்னிங்சில் தமிழக அணி 8 விக்கெட்டுக்கு 530 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. மூன்றாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் ஒடிசா அணி, 4 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்திருந்தது.

நேற்று, 4வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த ஒடிசா அணியின் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் தமிழக பவுலர்கள் திணறினர். பொறுப்பாக ஆடிய சான்டனு மிஷ்ரா (50), பிப்லாப் சமன்டிராய் (71) நம்பிக்கை அளித்தனர். அலோக் சந்திரா சஹூ (36), சூர்யகாந்த் பிரதான் (43) ஓரளவு கைகொடுத்தனர். அபாரமாக ஆடிய ராஜேஷ் துபார் (97) சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் ஒடிசா அணி 9 விக்கெட்டுக்கு 533 ரன்கள் எடுத்திருந்தது. பசந்த் மொகந்தி (18), திராஜ் சிங் (2) அவுட்டாகாமல் இருந்தனர். தமிழக அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4, யோ மகேஷ் 3 விக்கெட் கைப்பற்றினர். இதனையடுத்து போட்டி ‘டிரா’ ஆனது. ஆட்டநாயகன் விருதை ஒடிசா அணியின் ராஜேஷ் துபார் வென்றார்.

முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலை அடிப்படையில் ஒடிசா அணி 3 புள்ளிகள் பெற்றது. தமிழக அணிக்கு ஒரு புள்ளி மட்டுமே கிடைத்தது.

சித்தேஷ் அபாரம்: மும்பை ‘டிரா’

மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த மற்றொரு ‘சி’ பிரிவு லீக் போட்டியில், மும்பை, பரோடா அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் மும்பை 171, பரோடா 575/9 (‘டிக்ளேர்’) ரன்கள் எடுத்தன. ரஞ்சி கோப்பையில் 500வது போட்டியில் விளையாடிய மும்பை அணி, 3ம் நாள் முடிவில் 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 104 ரன்கள் எடுத்திருந்தது.

நேற்றைய 4ம் நாள் ஆட்டத்தில், 2வது இன்னிங்சை துவக்கிய மும்பை அணிக்கு ரகானே (45), சூர்யகுமார் யாதவ் (44) ஆறுதல் தந்தனர். அபிஷேக் நாயர் (8) ஏமாற்றினார். தனிநபராக போராடிய சித்தேஷ் லத், அரைசதம் கடந்தார்.

ஆட்டநேர முடிவில், 2வது இன்னிங்சில் மும்பை அணி 7 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து போட்டி ‘டிரா’ ஆனது. ஐந்து மணி நேரம் நிலைத்து நின்று ‘பேட்டிங்’ செய்த சித்தேஷ் லத், 238 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதன்மூலம் அணியை தோல்வியிலிருந்து மீட்டார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?