Advertisement


நட்பு கால்பந்து: அர்ஜென்டினா வெற்றி

நவம்பர் 12, 2017.
 Comments  
 


Friendly Soccer, Argentina, Russia
 

மாஸ்கோ: நட்பு கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி 1–0 என்ற கோல் கணக்கில் ரஷ்யாவை வீழ்த்தியது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், அர்ஜென்டினா, ரஷ்யா அணிகள் மோதிய நட்பு ரீதியிலான சர்வதேச கால்பந்து போட்டி நடந்தது. இப்போட்டி, அடுத்த ஆண்டு ‘பிபா’ உலக கோப்பை பைனல் (ஜூலை 15, 2018) நடக்கவுள்ள லுாஸ்னிக்கி மைதானத்தில் நடந்தது. இதன் முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட அர்ஜென்டினா அணிக்கு 86வது நிமிடத்தில் செர்ஜியோ அகுரோ, முதல் கோல் அடித்தார். இதற்கு, ரஷ்ய வீரர்களால் பதிலடி  தர முடியவில்லை.

ஆட்டநேர முடிவில் அர்ஜென்டினா அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

கத்தார் ஏமாற்றம்

கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த மற்றொரு நட்பு கால்பந்து போட்டியில், செக்குடியரசு, கத்தார் அணிகள் மோதின. இதில் ஆன்டோனின் பாரக் (15வது நிமிடம்) ஒரு கோல் அடித்து கைகொடுக்க, செக்குடியரசு அணி 1–0 என வெற்றி பெற்றது.

ஸ்பெயின் கோல் மழை

ஸ்பெயினில் நடந்த நட்பு ரீதியிலான சர்வதேச கால்பந்து போட்டியில், கோஸ்டாரிகா, ஸ்பெயின் அணிகள் விளையாடின. சொந்த மண்ணில் துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணி, கோல் மழை பொழிந்தது. ஜோர்டி ஆல்பா (6வது நிமிடம்), ஆல்வரோ மொராடா (23வது), டேவிட் சில்வா (51, 55வது), இனியஸ்டா (73வது) கோலடித்து கைகொடுக்க, ஸ்பெயின் அணி 5–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?