Advertisement


சானியா சோகம் தீருமா

நவம்பர் 12, 2017.
 Comments  
 


Sania Mirza, Indian Tennis, Knee Injury, Surgery
 

மும்பை: முழங்கால் காயத்திற்காக  ‘ஆப்பரேஷன்’ செய்ய வேண்டிய இக்க்கட்டான நிலையில் உள்ளார் சானியா.

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, 30. இதுவரை கிராண்ட்ஸ்லாம் தொடரில் பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையரில் தலா 3 பட்டம் வென்றுள்ளார். சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிசுடன் வெற்றிகளை குவித்தார்.  இவரை பிரிந்த பின், பார்போரா ஸ்டிரிகோவா (செக் குடியரசு), ஷூவாய் பெங் (சீனா) உடன் விளையாடி வந்தார். இந்நிலையில், வலது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் சில நாட்களாக போட்டியில் பங்கேற்கவில்லை. 

இது குறித்து சானியா கூறுகையில்,‘‘ இந்த ஆண்டு சற்று கடினமானதாக எனக்கு அமைந்துள்ளது.  முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வருகிறேன். இன்னும் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும். இதன்பின்தான், காயத்திற்கு ‘ஆப்பரேஷன்’ தேவையா என்பது குறித்து தெரியவரும். கிரிக்கெட் என்று மட்டும் இல்லாமல் அனைத்து விளையாட்டிலும் சாதிப்பவர்களை கண்டிப்பாக ஊக்குவிக்க வேண்டும். இதற்காக, ‘இந்தியன் ஸ்போர்ட்ஸ் ஹானர்ஸ்’ விருது உருவாக்கப்பட்டுள்ளது,’’ என்றார். 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?