Advertisement


சத்தியமாய் சாதித்‘தாய்’

நவம்பர் 12, 2017.
 Comments  
 


mary kom
 

சர்வதேச குத்துச்சண்டை அரங்கில் சாதனை நாயகியாக வலம் வருகிறார் மேரி கோம். மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர், கோதாவில் இறங்கிவிட்டால் சற்றும் அசராமல் எதிராளிக்கு குத்துவிடுகிறார். 34 வயதிலும் ஓய்வறியா சூரியனாக பிரகாசிக்கிறார். ஒலிம்பிக் சாம்பியன், ராஜ்யசபா எம்.பி., என எத்தனையோ கவுரவங்கள் பெற்றாலும், குத்துச்சண்டையில் பதக்கம் பெறும் தாகம் மட்டும் குறையவில்லை. சமீபத்தில் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் ஐந்தாவது முறையாக தங்கம் வென்ற இவரை சத்தியமாக பாராட்டத்தான் வேண்டும்.

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம்.  பின் தங்கிய வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் ‘கோம்’ என்ற பழங்குடி இனத்தை சேர்ந்தவர். துவக்கத்தில் ஓட்டம், ஈட்டி எறிதலில் கவனம் செலுத்திய மேரி கோம், 1998 ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற டின்கோ சிங்கைப் பார்த்து. 2000 முதல் குத்துச்சண்டையில் கவனம் செலுத்தினார்.  கடினமான பயிற்சி, உறுதியான உடல் பலம் கைகொடுக்க, சர்வதேச அரங்கில் கொடி கட்டிப் பறந்தார்.

ஐந்து ‘உலகம்’:

இந்திய பெண்கள் குத்துச்சண்டையில் ‘நம்பர்–1’ இடம் பிடித்தார். உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் ஐந்து முறை (2002, 2005, 2006, 2008, 2010) தங்கம் வென்றார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர் என்ற போதும், குத்துச்சண்டையில் ஆர்வம் குறையாதவர்.

2012, லண்டன் ஒலிம்பிக்கில் 51 கி.கி., எடைப்பிரிவில் வெண்கலம் கைப்பற்றினார். 2014ல் ஆசிய விளையாட்டில் முதன் முறையாக தங்கம் கைப்பற்றினார். பின் போட்டிகளில் இருந்து சற்று விலகினார். இதனால் தடுமாறிய மேரி கோம், 2016, ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை. இவருக்கு சிறப்பு அனுமதியும் மறுக்கப்பட, இனிஅவ்வளவு தான், ஓய்வு பெற்று விடுவார் என்று கூறப்பட்டது. ஆனால், கடுமையான பயிற்சிக்குப் பின், முன்பை விட உடல் எடையை குறைத்து, மறுபடியும் சர்வதேச அரங்கில் கால்பதித்தார்.

ஆசியாவில் தங்கம்:

சமீபத்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில், ஐந்து ஆண்டுகள் கழித்து, மீண்டும் 48 கி.கி., எடைப்பிரிவில் களம் புகுந்தார். சரிதா தேவி, பிரியங்கா அரையிறுதியில் வீழ்ந்தனர். பைனலில் சரிந்தார் சோனியா. ஆனால், உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேரி கோம், இத்தொடரில் ஐந்தாவது முறையாக தங்கம் (2003, 2005, 2010, 2012, 2017) வென்று மிரட்டினார்.

அசைக்க முடியாது

தனது வெற்றி ரகசியம் குறித்து மேரி கோம் கூறியது: பொதுவாக குத்துச்சண்டை போட்டிகளில் சாதிக்க வேண்டும் என்பதற்காகவே, நீண்ட காலமாக எனது உடற்தகுதியை தொடர்ந்து பாராமரித்து வருகிறேன். இதனால், எந்த ஒரு வீராங்கனையையும் வீழ்த்த முடிகிறது. இந்த ‘பார்ம்’ தொடரும் பட்சத்தில், யாராலும் என்னை அசைக்க முடியாது. மீண்டும் 48 கி.கி., எடைப்பிரிவுக்கு திரும்பியது மகிழ்ச்சி. இந்த பிரிவை, வரும் ஒலிம்பிக்கில் சேர்த்தால் நன்றாக இருக்கும். 2018ல் நடக்க உள்ள  காமன்வெல்த் விளையாட்டில் சாதிப்பது தான் எனது அடுத்த இலக்கு. இவ்வாறு மேரி கோம் கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?