Advertisement


சானியா ‘நம்பர்–12’

நவம்பர் 06, 2017.
 Comments  
 


india tennis sania mirza ranking
 

புதுடில்லி: டபிள்யு.டி.ஏ., டென்னிஸ் இரட்டையர் பிரிவு தரவரிசையில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா, 12வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

டென்னிஸ் அரங்கில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலில், டபிள்யு.டி.ஏ., வெளியிட்டது. இதில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, 9வது இடத்தில் இருந்து 12வது இடத்துக்கு தள்ளப்பட்டார். கடந்த 2013, மார்ச் 17 ல் இருந்து தொடர்ச்சியாக ‘டாப்–10’ பட்டியலில் இடம் பிடித்து வந்த இவர், முதன்முறையாக பின்னடைவை சந்தித்தார். இந்த ஆண்டு பிரிஸ்பேன் சர்வதேச தொடரில் மட்டும் பட்டம் வென்ற இவர், சிட்னி, மயாமி ஓபனில் பைனல் வரை சென்றார்.

ஆண்களுக்கான ஏ.டி.பி., இரட்டையர் பிரிவு தரவரிசையில், இந்தியாவின் திவிஜ் சரண், 51வது இடத்தில் இருந்து முதன்முறையாக 50வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் ரோகன் போபண்ணா, 14வது இடத்தில் இருந்து 15வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்தியாவின் புரவ் ராஜா, 62வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். மற்ற இந்திய வீரர்களான லியாண்டர் பயஸ் (70வது இடம்), ஜீவன் நெடுஞ்செழியன் (97) பின்னடைவை சந்தித்தனர். விஷ்ணு வர்தன் (118 வது), ஸ்ரீராம் பாலாஜி (139) முன்னேற்றம் கண்டனர்.

ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, ஒரு இடம் பின்தங்கி 140வது இடம் பிடித்தார். ராம்குமார் ராமநாதன், 150வது இடத்தில் இருந்து 148 வது இடத்துக்கு முன்னேறினார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?