Advertisement


கால்பந்து பயிற்சியாளரை நீக்குங்கள்: இந்திய வீரர்கள் போர்க்கொடி

அக்டோபர் 27, 2017.
 Comments  
 


Stephen Constantine, Indian Football Coach
 

கோல்கட்டா: பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டன்டைனை நீக்க வேண்டுமென  இந்திய கால்பந்து அணி வீரர்கள், வலியுறுத்தியுள்ளனர்.

இந்திய ‘சீனியர்’ கால்பந்து அணி பயிற்சியாளராக, 2016, பிப்., முதல் இங்கிலாந்தின் ஸ்டீபன் கான்ஸ்டன்டைன், 55, உள்ளார். இவரது பயிற்சியில் இந்திய அணி, சர்வதேச அரங்கில் தொடர்ந்து 11 போட்டிகளில் (10 வெற்றி, 1 ‘டிரா’) தோற்காமல் வலம் வருகிறது. தவிர, உலகத் தரவரிசையில் 173 வது இடத்தில் இருந்த இந்திய அணி. கடந்த 20 ஆண்டுகளில் முதன் முறையாக, ‘டாப்–100’ இடத்துக்குள் (96வது) முன்னேறியது.

தவிர, 2011க்குப் பின் முதன் முறையாக ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. இருப்பினும், ஸ்டீபன் பயிற்சியில் இந்திய வீரர்களுக்கு திருப்தி இல்லையாம்.

இதனால், இந்திய அணியின் 5 முன்னணி வீரர்கள், அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) செயலர் குஷால் தாசை சந்தித்தனர். அப்போது,‘ ஸ்டீபனுக்கு தொழில்நுட்ப ரீதியில் போதிய அனுபவம் இல்லை. இவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருக்க தகுதி இல்லை. உடனடியாக நீக்க வேண்டும்,’ என, தெரிவித்தனர்.

இதுகுறித்து குஷால் தாஸ் கூறுகையில்,‘‘ பல்வேறு பிரச்னைகள் குறித்து வீரர்கள், பயிற்சியாளர்கள், அதிகாரிகளை வழக்கமாக சந்திப்போம். இதுபோலத் தான், வீரர்கள் என்னை சந்தித்தனர். பயிற்சியாளர் குறித்து முடிவு செய்யும் இடத்தில் நான் இல்லை,’’ என்றார்.

சுயசரிதை காரணமா

சில மாதங்களுக்கு முன், பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் எழுதிய ‘டில்லி டு டென்’ என்ற சுயசரிதை புத்தகம் வெ ளியானது. இதில் ‘சூப்பர் ஸ்டார்களுடன் மோதல்’ என்ற தலைப்பில்,‘ ஐ.எஸ்.எல்., தொடரில் வீரர்களுக்கு அதிகமான பணம் தரப்படுகிறது. இது தான், குவாமிற்கு எதிரான உலக கோப்பை தகுதிச்சுற்றில் இந்திய வீரர்கள் மோசமாக விளையாட காரணம்,’ என்பது போல தெரிவித்துள்ளார். இதுகூட வீரர்கள் எதிர்ப்புக்கு காரணமாக இருக்கும் எனத் தெரிகிறது. 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?