Advertisement


பராகுவே ‘ஹாட்ரிக்’ வெற்றி

அக்டோபர் 12, 2017.
 Comments  
 


fifa soccer
 

மும்பை: ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து (17 வயது) தொடரில், பராகுவே அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது. நேற்று நடந்த லீக் போட்டியில் 3–1 என துருக்கியை தோற்கடித்தது.

இந்தியாவில், 17 வயதுக்குட்பட்டோருக்கான, 17வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று, மும்பையில் நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில் பராகுவே, துருக்கி அணிகள் மோதின.

முதலிரண்டு போட்டிகளில் மாலி, நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி, ஏற்கனவே ‘ரவுண்டு–16’ சுற்றுக்கு தகுதி பெற்றிருந்த பராகுவே அணிக்கு, 2வது நிமிடத்தில் ‘பெனால்டி’ வாய்ப்பு கிடைத்தது. இதில் அனிபல் வேகா அடித்த பந்தை, துருக்கி அணி கோல்கீப்பர் பெர்க், அருமையாக தடுக்க, பராகுவேயின் கோல் வாய்ப்பு நழுவியது. பின், 41வது நிமிடத்தில் கிடைத்த ‘பிரீ கிக்’ வாய்ப்பில் பராகுவே வீரர் ஜியோவானி போகடோ, முதல் கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய பராகுவே அணிக்கு, 43வது நிமிடத்தில் பிளாஸ் ஆர்மோயா ‘பாஸ்’ செய்த பந்தில் பெர்ணான்டோ கார்டோசோ, ஒரு கோல் அடித்தார். இதற்கு துருக்கி அணியினரால் பதிலடி தர முடியவில்லை. முதல் பாதி முடிவில் பராகுவே அணி 2–0 என முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியிலும் அபாரமாக ஆடிய பராகுவே அணிக்கு, 61வது நிமிடத்தில் அன்டோனியோ காலியானோ, தன்பங்கிற்கு ஒரு கோல் அடித்து 3–0 என வலுவான முன்னிலை பெற்றுத் தந்தார். ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (90+3வது நிமிடம்) எழுச்சி கண்ட துருக்கி அணிக்கு கரிம் கெசின், ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். ஆட்டநேர முடிவில் பராகுவே அணி 3–1 என, தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பெற்றது. இதன்மூலம் ’பி’ பிரிவில் 9 புள்ளிகளுடன் முதலிடத்தை உறுதி செய்தது.

‘ரவுண்டு–16’ சுற்றில் மாலி

டில்லியில் நடந்த மற்றொரு ‘பி’ பிரிவு லீக் போட்டியில் மாலி, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய மாலி அணி, 3–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மாலி அணி, 3 போட்டியில் 2 வெற்றி, ஒரு தோல்வி என 6 புள்ளிகளுடன் ‘பி’ பிரிவில் 2வது இடம் பிடித்து, ‘ரவுண்டு–16’ சுற்றுக்கு தகுதி பெற்றது.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?