Advertisement


‘குட்–பை’ சொல்கிறார் நெஹ்ரா

அக்டோபர் 12, 2017.
 Comments [1]  
 


nehra
 

ஐதராபாத்: இந்திய அணி ‘சீனியர்’ வேகப்பந்துவீச்சாளர் வரும் நவம்பர் 1ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.

இந்திய அணி இடது கை வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா, 38. கடந்த 1999 பிப்ரவரியில் இலங்கைக்கு எதிரான கொழும்பு டெஸ்டில் அறிமுகம் ஆனார். இதுவரை 17 டெஸ்ட் (44 விக்.,), 120 ஒருநாள் (157), 26 ‘டுவென்டி–20’ (34) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அசார் துவங்கி கோஹ்லி வரை பல கேப்டன்களுடன் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர். தற்போதைய, ஆஸ்திரேலியா ‘டுவென்டி–20’ தொடரில் இடம் பெற்றபோதும், முதலிரண்டு போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை. வரும் நவம்பர் 1ம் தேதியுடன் சர்வதேச அரங்கிலிருந்து விடை பெற உள்ளார். 

இது குறித்து நெஹ்ரா கூறியது: இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் சிறப்பாக செயல்படுகிறார். ஒட்டு மொத்த பொறுப்பையும் தோளில் சுமக்க தயாராகிவிட்டார். அடுத்த 6 மாதங்களில் மிகப்பெரிய தொடரும் இல்லை. இதனால், சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெறும் எண்ணத்திற்கு வந்துவிட்டேன். 

உள்ளூர் மண்:

இந்தியா, நியூசிலாந்து அணிகள் அடுத்த மாதம் 1ம் தேதி டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் ‘டுவென்டி–20’யில் மோத உள்ளன. இப்போட்டியுடன், விடை பெற உள்ளேன். கடந்த 20 ஆண்டுக்கு முன் இங்கு தான் ரஞ்சி கோப்பையில் முதல் முறையாக விளையாடினேன். இதே மைதானத்தில் உள்ளூர் ரசிகர்கள் முன் ஓய்வு பெறுவதை விட வேறு பெரிய விஷயம் எதுவும் இல்லை. 

ஐ.பி.எல்., இல்லை:

இன்னும் ஒரு ஆண்டு போட்டிகளில் பங்கேற்கலாம் என சிலர் கூறுகின்றனர். எப்போது ஓய்வு பெறுவார் என சிந்திப்பதற்குப்பதில், ஏன் ஓய்வு பெறுகிறார் என நினைக்கும் காலகட்டத்திலேயே விடை பெறுவது அவசியம். உச்சத்தில் இருக்கும்போதே ஓய்வு பெறுவதுதான் நல்லது. இனி, ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க மாட்டேன்.  உலக கோப்பை (2003) தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக 6 விக்கெட் வீழ்த்தினேன். இப்படி பல மறக்க முடியாத தருணங்களை ரசிகர்கள் நினைத்து மகிழ்ந்தாலும், என்னுடைய விருப்பம் இது கிடையாது. கடைசி ஓவரை வீச என்னை கேப்டன் அழைப்பதுதான் சிறந்த தருணம். இவ்வாறு நெஹ்ரா கூறினார். 

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
1   0  
ranjan 4 days ago | Report abuse
கோஹ்லி கடைசி வரையும் சான்ஸ் தரமாட்ட்டார் எனவே கவ்ரவமாக விலகுவது புத்தியானது எனினும் நெஹ்ராவுக்கு வாழ்த்துக்கள்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?