Advertisement


போராடி வீழ்ந்தது இந்திய அணி: அடுத்த சுற்றில் கானா

அக்டோபர் 12, 2017.
 Comments  
 


india soccer
 

புதுடில்லி: உலக கோப்பை கால்பந்து (17 வயதுக்குட்பட்ட) லீக் போட்டியில் கானாவிடம் தோற்ற இந்திய அணி, தொடரில் இருந்து வெளியேறியது. இருப்பினும், இத்தொடரில் நமது வீரர்களின் ஆட்டம் வியக்கத்தக்க வகையில் இருந்தது. இந்திய கால்பந்துக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதை உணர்த்தினர்.

இந்தியாவில், உலக கோப்பை கால்பந்து (17 வயதுக்குட்பட்ட) தொடர் நடக்கிறது. போட்டியை நடத்தும் அணி என்ற வகையில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றது இந்திய அணி. முதல் இரு போட்டியில் தோற்ற இந்திய அணி, தனது மூன்றாவது மற்றும் கடைசி லீக் போட்டியில், இரு முறை சாம்பியன் ஆன கானாவை (1991, 1995) சந்தித்தது.  

‘ஆப் சைடு’ கோல்:

போட்டியின் துவக்கத்தில் இந்திய வீரர்கள் தாக்குதல் பாணியில் களமிறங்கினர். இதனால், தற்காப்பு பகுதியில் யாரும் இல்லாமல் போக, கானா அணி சார்பில் ஒரு கோல் அடிக்கப்பட்டது. நல்லவேளையாக நடுவர் இதை ‘ஆப் சைடு’ என்று அறிவிக்க, இந்திய ரசிகர்கள் ஆறுதல் அடைந்தனர்.  முதல் 25 நிமிடத்தில் பந்து 51 சதவீதம் இந்திய வீரர்களின் கட்டுப்பாட்டுக்குள் தான் இருந்தது. 

மாறிய நிலைமை:

இதன் பின் நிலைமை மாறியது. போட்டியின் 33வது நிமிடத்தில் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்ட போரிஸ் தங்ஜம், ‘எல்லோ கார்டு’ பெற்றார். 43வது நிமிடத்தில் இப்ராகிம் அடித்த பந்தை, இந்திய கோல் கீப்பர் தீரஜ் தடுத்தார். ஆனால் அருகில் இருந்த எரிக், அதை மீண்டும் திருப்பி அடிக்க, பந்து கோலாக மாற, முதல் பாதியில் இந்திய அணி 0–1 என, பின்தங்கியது.

மற்றொரு கோல்:

இரண்டாவது பாதியில், இந்திய வீரர்கள் தற்காப்பு ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்த துவங்கினர். இதனால், ஒரு கட்டத்தில் அனிகீத் மட்டும், தனி நபராக தாக்குதல் பகுதியில் போராடினார். இருப்பினும், 52வது நிமிடத்தில் கானாவின் எரிக், மற்றொரு கோல் அடிக்க, இந்திய ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். 54வது நிமிடம் இந்திய அணி கேப்டன் அமர்ஜீத், ‘எல்லோ கார்டு’ வாங்கினார். 81வது நிமிடத்தில் இந்திய வீரர் ராகுல், 83 வது நிமிடத்தில் லாலென்மாவியா அடித்த பந்துகளை, எளிதாக தடுத்தார் கானா கோல் கீப்பர் தன்லத். இந்த நேரத்தில் கானாவின் தன்சோ (86வது), டோகு (87வது) என, அடுத்தடுத்த நிமிடங்களில் கோல் அடித்தனர். இந்திய தரப்பில் பதிலுக்கு ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. முடிவில், இந்திய அணி 0–4 என்ற கணக்கில் தோற்று, உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

சோகம் வேண்டாம்:

முதன் முதலில் உலக கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்ற நமது இளம் வீரர்கள், எதிர்பார்ப்புக்கு மாறாக துணிச்சலான போராட்டத்தை வெளிப்படுத்தினர். வலிமையான அணிகளான அமெரிக்கா, கொலம்பியா, கானாவுக்கு எதிராக கடும் சவால் கொடுத்தனர்.  இந்திய கால்பந்துக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதை உணர்த்தி விட்டு, விடைபெற்றனர்.

அமெரிக்கா தோல்வி

நேற்று மும்பையில் நடந்த ‘ஏ’ பிரிவின் மற்றொரு போட்டியில் அமெரிக்கா, கொலம்பிய அணிகள் மோதின. போட்டியின் 3வது நிமிடத்தில் கொலம்பிய வீரர் விடல் ஒரு கோல் அடித்தார். 24வது நிமிடம் அகஸ்டா (அமெரிக்கா) ஒரு கோல் அடிக்க, ஸ்கோர் 1–1 என, சமன் ஆனது. இரண்டாவது பாதியில் பெனலோஜா (67), கெய்செடோ (87) கோல் அடிக்க, கொலம்பிய அணி 3–1 என, வென்றது. இருப்பினும், இப்பிரிவில் 2 வெற்றிகள் பெற்ற இந்த அணிகள், அடுத்த சுற்றுக்கு முன்னேறின. 

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?