Advertisement


மன்னிப்பு கேட்ட கவுகாத்தி ரசிகர்கள்

அக்டோபர் 12, 2017.
 Comments  
 


cricket fans
 

கவுகாத்தி: ஆஸ்திரேலிய அணி வீரர்களிடம் கவுகாத்தி ரசிகர்கள் மன்னிப்பு கேட்டனர். 

இந்தியா, ஆஸ்திரேலியா மோதிய 2வது போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. போட்டி நடந்த கவுகாத்தியில் உள்ள பார்சபரா மைதானத்தில்இருந்து ஓட்டலுக்கு திரும்பிய போது, ஆஸ்திரேலிய வீரர்கள் சென்ற பஸ் மீது கல் வீசப்பட்டது. இதில், ஜன்னல் கண்ணாடி உடைந்தது. அதிர்ஷ்டவசமாக வீரர்களுக்கு காயம் ஏற்படவில்லை. இதற்கு, இந்திய ‘சுழல்’ வீரர் அஷ்வின், வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கவுகாத்தியை சேர்ந்த ரசிகர்கள் சிலர் ஆஸ்திரேலிய அணி வீரர்களிடம், நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டனர். இதற்காக, வீரர்கள் தங்கியிருந்து ஓட்டல் முன்பு, மன்னிப்பு வார்த்தைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நின்றனர். அதில்,‘ அன்புக்குரிய ஆஸ்திரேலிய வீரர்களே எங்களை மன்னித்து விடுங்கள்,’ என, எழுதி இருந்தது. 

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?