Advertisement


பாகிஸ்தான் கால்பந்து ‘சஸ்பெண்ட்’

அக்டோபர் 11, 2017.
 Comments  
 


fifa soccer
 

லாகூர்: மூன்றாவது நபரின் தலையீடு காரணமாக, பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பை ‘பிபா’ சஸ்பெண்ட் செய்துள்ளது.

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பில் (‘பிபா’) பாகிஸ்தான் அணி உறுப்பினராக உள்ளது. இந்நிலையில், கடந்த 2015ல் லாகூர் கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகிகள் தேர்தலில் மோதல் ஏற்பட்டது. இதனால், பாகிஸ்தான் கூட்டமைப்பு (பி.எப்.எப்.,) இரண்டாக பிரிந்தது. இந்த வழக்கை விசாரித்த லாகூர் உயர்நீதிமன்றம், பி.எப்.எப்., கணக்குகளை நிர்வகிக்க நபர் ஒருவர் நீதிமன்றம் சார்பில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், பி.எப்.எப். அமைப்பை ‘சஸ்பெண்ட்’ செய்து ‘பிபா’ உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து ‘பிபா’ வெளியிட்ட அறிக்கையில்,‘ பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பின் கணக்கு மற்றும் அலுவலக பணிகள் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரியிடம்தான் இன்னும் உள்ளன. நிர்வாகத்தில் மூன்றாவது நபரின் தலையீடு, எங்களின் விதிமுறையை மீறுவதாகும். இதனால், பி.எப்.எப். அமைப்பை ‘சஸ்பெண்ட்’ செய்கிறோம். மூன்றாவது நபரின் தலையீடு நீங்கும் வரையில், இது தொடரும்,’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ‘பிபா’ மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு நடத்தும் எவ்வித போட்டிகளிலும் பாகிஸ்தான் பங்கேற்க முடியாது. 

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?