Advertisement


அர்ஜென் ராபென் ஓய்வு

அக்டோபர் 11, 2017.
 Comments  
 


Arjen Robben
 

ஆம்ஸ்டர்டம்: உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற முடியாத சோகத்தில் நெதர்லாந்து கால்பந்து அணி கேப்டன் அர்ஜென் ராபென் ஓய்வு பெற்றார். 

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு (ஜூன் 14–ஜூலை 15) ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. இதற்கான ஐரோப்பிய அணிகளுக்கான தகுதிச்சுற்றில் 54 அணிகள் தலா 6 வீதம் பிரிக்கப்பட்டு மோதின. இதன் கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து, சுவீடன் அணியை சந்தித்தது. இதன் 16வது நிமிடத்தில் நெதர்லாந்து அணிக்கு  கிடைத்த ‘பெனால்டி கிக்’ வாய்ப்பை கேப்டன் ராபென் கோலாக்கினார். தொடர்ந்து அசத்திய இவர் இரண்டாவது கோல் (40வது நிமிடம்) அடித்தார். எதிரணி பதிலடி தர மறுக்க, நெதர்லாந்து அணி 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இருப்பினும், ‘ஏ’ பிரிவுக்கான புள்ளிப்பட்டியலில் கோல் வித்தியாச அடிப்படையில் மூன்றாவது இடம் பிடித்த (19) நெதர்லாந்து உலக கோப்பைக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. 

கேப்டன் ஓய்வு:

இத்துடன், நெதர்லாந்து அணி கேப்டன் அர்ஜென் ராபென், 33, சர்வதேச அரங்கிலிருந்த ஓய்வு பெற்றார். கடந்த 2003ல் போர்ச்சுகல் அணிக்கு எதிராக அறிமுகமான இவர், இதுவரை 96 போட்டியில் 37 கோல் அடித்துள்ளார். கடந்த 2010ல் தென் ஆப்ரிக்காவில் நடந்த ‘பிபா’ உலக கோப்பையில் நெதர்லாந்து அணியை பைனல் வரை அழைத்து சென்றிருந்தார். 

இது குறித்து ராபென் கூறுகையில்,‘‘ நெதர்லாந்து அணிக்காக 14 ஆண்டுகள் விளையாடியது சிறப்பான அனுபவம். 2010, 2014 உலக கோப்பை தொடரை என்றும் நினைத்திருப்பேன்,’’ என்றார்.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?