Advertisement


அஷ்வின் ‘நம்பர்–4’: தரவரிசையில் பின்னடைவு

அக்டோபர் 11, 2017.
 Comments [1]  
 


ashwin
 

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில், பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிந்திர ஜடேஜா (884 புள்ளி), ‘நம்பர்–2’ இடத்தில் நீடிக்கிறார். முதலிடத்தை இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் (896), தக்கவைத்துக் கொண்டார். தமிழக சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் (852), 3வது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார். சமீபத்தில் புளோயம்போன்டினில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில், இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட் கைப்பற்றிய தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடா (876), ‘நம்பர்–3’ இடத்துக்கு முன்னேறினார்.

புஜாரா ‘நம்பர்–4‘:

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் புஜாரா (876 புள்ளி) 4வது, கேப்டன் விராத் கோஹ்லி (806), 6வது இடத்தை தக்கவைத்துக் கொண்டனர். மற்ற இந்திய வீரர்களான லோகேஷ் ராகுல் (8வது இடம்), அஜின்கியா ரகானே (9வது) ஆகியோர் தலா ஒரு இடம் முன்னேறினர். முதல் மூன்று இடங்களில் முறையே ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (936 புள்ளி), இங்கிலாந்தின் ஜோ ரூட் (889), நியூசிலாந்தின் வில்லியம்சன் (880) தொடர்கின்றனர்.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
ranjan 7 days ago | Report abuse
கவலைப்படவேண்டிய விஷயம் அஸ்வினை ஏன் புறக்கணிக்கிறார்கள் என்பது தெரியவில்லை நன்றாகவிளையாடிக்கொண்டிருந்தவர் இப்போதும் இங்கிலாந்து கவுண்டி அணியில் பந்துவீச்சு, பேட்டிங் இரண்டுமே நல்லாக செய்கிறார்.




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?