Advertisement


அசத்துமா இந்திய கால்பந்து அணி: இன்று கானாவுடன் மோதல்

அக்டோபர் 11, 2017.
 Comments  
 


india under 17 soccer
 

புதுடில்லி: உலக கோப்பை கால்பந்து (17 வயதுக்குட்பட்ட) தொடரில் இன்று இந்திய அணி, கடைசி லீக் போட்டியில் வலிமையான கானாவை சந்திக்கிறது. இதில் சிறப்பாக வெல்லும் பட்சத்தில் அடுத்து சுற்று வாய்ப்பு குறித்து யோசிக்கலாம்.

இந்தியாவில், உலக கோப்பை கால்பந்து (17 வயதுக்குட்பட்ட) தொடர் நடக்கிறது. போட்டியை நடத்தும் அணி என்ற வகையில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றது இந்திய அணி. முதலில் அமெரிக்கா (0–3), அடுத்து கொலம்பியா (1–2) என, இரு போட்டியில் தோற்ற இந்திய அணி, புள்ளிக்கணக்கை துவக்காமல் உள்ளது. இன்று இரு முறை சாம்பியன் ஆன கானாவை (1991, 1995) சந்திக்கிறது. 

இன்று கட்டாயம் வென்றால் மட்டுமே அடுத்த சுற்று குறித்து யோசிக்க முடியும் என்ற நிலையில் பயிற்சியாளர் டி மாடோஸ்,  மீண்டும் 4–4–1–1 என்ற திட்டப்படி தான் வீரர்களை களமிறக்குவார் எனத் தெரிகிறது.  ஏனெனில், கடந்த போட்டியில் முதல் பாதியின் ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் ராகுல் கன்னோலி அடித்த பந்து, கோல் போஸ்ட் மீது படாமல் இருந்திருந்தால், இந்திய அணி முன்னிலை பெற்றிருக்கும்.

ஜீக்சன் பலம்:

உலக கோப்பை வரலாற்றில் இந்தியாவின் முதல் கோல் அடித்த ஜீக்சன் சிங், இன்று போட்டி முழுவதும் விளையாடினால் நல்லது. 6.2 அடி உயரம் கொண்ட இவர், உடலளவில் பலம் வாய்ந்த கானா வீரர்களுக்கு சரியான பதிலடி தர வாய்ப்பு உள்ளது. கோல்கீப்பர் தீரஜ் சிங், இன்றும் துடிப்பாக செயல்படலாம். மத்திய களத்தில் கேப்டன் அமர்ஜீத் சிங், அன்வர் அலி, நமித் தேஷ்பாண்டே இந்திய தற்காப்புக்கு அரணாக இருப்பர். எதிரணியின் கோல் ஏரியாவில், ராகுல் கன்னோலி, போரிஸ் சிங் அசத்துகின்றனர். சஞ்சீவ் ஸ்டாலினும் நம்பிக்கை தருகிறார்.

கானா சவால்:

 கானாவை பொறுத்தவரையில் முதல் போட்டியில் கொலம்பியாவை வென்றது. அடுத்து அமெரிக்காவிடம் தோற்றதால், 3 புள்ளி மட்டும் பெற்றது. இன்று வென்றால், ‘ஏ’ பிரிவில் இருந்து எவ்வித பிரச்னையும் இல்லாமல் ‘ரவுண்டு–16’ சுற்றுக்கு செல்லும்.

வாய்ப்பு எப்படி

உலக கோப்பை லீக் சுற்று முடிவில், 6 பிரிவில் முதல் இரு இடம் பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்லும். பின், 6 பிரிவுகளில் 3 வது இடம் பிடித்த, சிறந்த 4 அணிகளுக்கு ‘நாக் அவுட்’ வாய்ப்பு கிடைக்கும். ‘ஏ’ பிரிவில் உள்ள இந்திய அணி (2 தோல்வி) இன்னும் புள்ளிக் கணக்கை துவக்கவில்லை. அதேநேரம் 2 போட்டியில் 1 கோல் அடித்து, 5 கோல் வாங்கியுள்ளது. கோல் வித்தியாசம் –4 ஆக உள்ளது. இருப்பினும், இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற லேசான வாய்ப்பு உள்ளது.

இதன் விவரம்:

* இன்று இந்திய அணி, 3–0 என, கானாவை வெல்ல வேண்டும்.

* அமெரிக்கா, கொலம்பியாவை 2–0 என, வீழ்த்த வேண்டும்.

* அமெரிக்கா (9) தவிர, இந்தியா, கொலம்பியா, கானா அணிகள் தலா 3 புள்ளிகள் பெறும்.

* கோல் வித்தியாசத்தில் இந்தியா –1, கொலம்பியா –2, கானா –3 என்ற வரிசை கிடைக்கும்.

* இதன் படி எல்லாம் சரியாக நடந்தால், இந்தியா 2வது இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு செல்லலாம்.

* ஒருவேளை, 3வது இடம் பிடிக்க நேர்ந்தால், மற்ற போட்டிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?