Advertisement


ஓய்வு பெறுகிறார் நெஹ்ரா

அக்டோபர் 11, 2017.
 Comments  
 


nehra
 

புதுடில்லி: ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும், வரும் நவ., 1ல் ஓய்வு பெறவுள்ளார் நெஹ்ரா.

இந்திய அணியின் ‘சீனியர்’ வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா, 38. கடந்த 1999 பிப்ரவரியில் இலங்கைக்கு எதிரான கொழும்பு டெஸ்டில் அறிமுகம் ஆனார். இதுவரை 17 டெஸ்ட் (44 விக்.,), 120 ஒருநாள் (157), 26 ‘டுவென்டி–20’ (34) போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

அசார், கங்குலி, தோனி தற்போது கோஹ்லி என, பல கேப்டன்களுடன் விளையாடிய அனுபவம்  வாய்ந்தவர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ‘டுவென்டி–20’ அணியில் இடம் பிடித்தார்.

இருப்பினும் முதல் இரு போட்டியில் களமிறங்கிய ‘லெவன்’ அணியில் சேர்க்கப்படவில்லை. இதனால், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வரும் வகையில், நெஹ்ரா விரைவில் ஓய்வு பெறுவார் என செய்திகள் வெளியாகின. தற்போது இது உறுதி செய்யப்பட்டது. வரும் நவ., 1ல் சொந்தமண்ணில் (டில்லி, பெரோஷா கோட்லா மைதானம்) நடக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ‘டுவென்டி–20’ போட்டியுடன், ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் விடை பெற முடிவு செய்துள்ளார். இதனால், வரும் 11வது ஐ.பி.எல்., தொடரிலும் நெஹ்ரா, பங்கேற்க மாட்டார். இத்தகவலை, கேப்டன் கோஹ்லி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் தெரிவித்து விட்டாராம்.

இதுகுறித்து நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘ வரும் இலங்கை தொடர் வரையில் இவர் விளையாடுவார் என ஒருசிலர் நினைத்திருக்கலாம். ஆனால், ஓய்வுக்கு இது தான் சரியான தருணம் என, நெஹ்ரா நினைக்கிறார். நவ., 1க்குப் பின் போட்டிகளில் பங்கேற்க அவர் விரும்பவில்லை,’’ என்றார்.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?