Advertisement


மெக்சிகோவை வென்றது இங்கிலாந்து

அக்டோபர் 11, 2017.
 Comments  
 


england team
 

கோல்கட்டா: உலக கோப்பை கால்பந்து (17 வயது) தொடரின் ‘ரவுண்டு–16’ சுற்றுக்கு இங்கிலாந்து அணி முன்னேறியது. நேற்று நடந்த ‘எப்’ பிரிவு லீக் போட்டியில் 3–2 என மெக்சிகோ அணியை வீழ்த்தி, 2வது வெற்றியை பதிவு செய்தது.

இந்தியாவில், 17 வயதுக்குட்பட்டோருக்கான, 17வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று, கோல்கட்டாவில் உள்ள சால்ட்லேக் மைதானத்தில் நடந்த ‘எப்’ பிரிவு லீக் போட்டியில் இங்கிலாந்து, மெக்சிகோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் கிடைத்த ‘பிரீ கிக்’ வாய்ப்பில் இங்கிலாந்தின் புரூஸ்டர், முதல் கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் இங்கிலாந்து 1–0 என முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணிக்கு 48வது நிமிடத்தில் சான்சோ ‘பாஸ்’ செய்த பந்தில் பிலிப் போடென், ஒரு கோல் அடித்தார். பின், 55வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பில் சான்சோ, ஒரு கோல் அடிக்க இங்கிலாந்து அணி 3–0 என வலுவான முன்னிலை பெற்றது. மெக்சிகோ அணிக்கு 65வது நிமிடத்தில் டியாகோ லேனேஸ், முதல் கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய இவர், 72வது நிமிடத்தில் ராபர்டோ டி லா ரோசா ‘பாஸ்’ செய்த பந்தை கோலாக மாற்றினார்.

ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3–2 என வென்றது. 2வது வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து,  6 புள்ளிகளுடன், ‘ரவுண்டு–16’ சுற்றுக்கான இடத்தை உறுதி செய்தது.

பிரான்ஸ் வெற்றி:

அசாமின் கவுகாத்தியில் நடந்த ‘இ‘ பிரிவு லீக் போட்டியில் பிரான்ஸ் அணி, ஜப்பானை 2–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. பிரான்ஸ் அணிக்கு அமினே கோயிரி (13, 71வது நிமிடம்) நம்பிக்கை தந்தார். ஜப்பான் அணிக்கு மியாஷிரோ (73வது நிமிடம்) ஆறுதல் தந்தார். பிரான்ஸ் அணி, தொடர்ந்து 2வது வெற்றியை பெற்று, 6 புள்ளிகளுடன் ‘நாக்–அவுட்’ சுற்றுக்கு தகுதி பெற்றது.

ஈராக் அபாரம்

கோல்கட்டாவில் நடந்த ‘எப்’ பிரிவு லீக் போட்டியில் ஈராக், சிலி அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய ஈராக் அணி 3–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஈராக் அணி சார்பில் முகமது தாவூத் 2 கோல் (6, 68வது நிமிடம்) அடித்தார். சிலி வீரர் வாலன்சியா (81வது நிமிடம்), ஒரு ‘சேம்சைடு’ கோல் அடித்தார்.

ஹோண்டுராஸ் கலக்கல்

அசாமின் கவுகாத்தியில் நடந்த ‘இ’ பிரிவு லீக் போட்டியில் ஹோண்டுராஸ், நியூ கேலடோனியா அணிகள் மோதின. அசத்தலாக ஆடிய ஹோண்டுராஸ் அணி 5–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த அணிக்கு மெஜியா (25, 42வது நிமிடம்), கேனல்ஸ் (27வது), பலாசியஸ் (51, 88வது) கைகொடுத்தனர்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?